இந்திய 'ப்ளேயர்ஸ்'ல ஒருத்தர் கூடவா 'அந்த லிஸ்ட்'ல இல்ல...? ஐசிசி வெளியிட்ட 'டாப்-20' லிஸ்ட்...! - இந்த தடவையும் 'அவங்க' தான் டாப்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி டி-20 கிரிக்கெட் அணிகளின் தரவரிசை பட்டியலை பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என்ற பிரிவுகளாக வெளியிட்டுள்ளது.

Advertising
>
Advertising

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 2021ஆம் ஆண்டுக்கான டி-20 கிரிக்கெட் போட்டிகளின் அடிப்படையில் கிரிக்கெட் அணியின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில் 20 ஓவர் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் டாப்-3 இடங்களில் கடந்த வருடத்தில் இருந்து எந்தவித மாற்றமும் இல்லாமல் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலிடத்திலும், இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் மார்க்ராம் 3-வது இடத்திலும் இருக்கின்றனர்.

குறிப்பாக நடப்பு ஆண்டு நடந்த கிரிக்கெட் தொடரின் எதிரொலியாக பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஒரு இடம் உயர்ந்து 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

அதோடு, இந்தியாவின் லோகேஷ் ராகுல் 5-ல் இருந்து 6-வது இடத்துக்கு சறுக்கியுள்ளார். இந்திய வீரர்கள் விராட் கோலி 8-வது இடத்திலும், ரோகித் சர்மா 16-வது இடத்திலும் உள்ளனர்.

சென்ற ஐசிசி 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டின் தொடர்நாயகனாக ஜொலித்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கடந்த வருடம் 25வது இடத்தில் இருந்தவர் இப்போது 8 இடங்கள் எகிறி 33-வது இடத்தையும், ஆட்டநாயகனாக தேர்வான மிட்செல் மார்ஷ் 6 இடங்கள் முன்னேறி 13-வது இடத்தையும் பெற்றுள்ளனர். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 7 இடங்கள் அதிகரித்து 32-வது இடத்தில் இருக்கிறார்.

பந்துவீச்சாளர்களின் தரவரிசையை பார்த்தால் ஹசரங்கா (இலங்கை) முதல் இடத்திலும், தப்ரைஸ் ஷம்சி (தென்ஆப்பிரிக்கா) 2-வது இடத்திலும் உள்ளனர். கடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் மொத்தம் 13 விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா கடந்த வருடம் இருந்த 5வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இதில் குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால் டாப்-10 இடங்களில் இந்திய பவுலர்கள் யாரும் இடம் பெறவில்லை.

எப்போதும் போல டி-20 அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து அசைக்க முடியா டாப் 1-ல் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியாவும்,  மூன்றாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளது. அதை தொடர்ந்து நான்காவது , ஐந்தாவது, ஆறாவது இடங்களை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, உலக சாம்பியன் ஆஸ்திரேலியா பிடித்துள்ளது. 

பந்துவீச்சில் 4-ம் இடத்தில் ஆதில் ரஷீத், 5ம் இடத்தில் ரஷீத் கான், ஜோஷ் ஹேசில்வுட், முஜீப் உர் ரஹ்மான், ஆன்ரிச் நார்ட்யே. டிம் சவுதீ, ஜோர்டான் ஆகியோர் பகிர்ந்துள்ளனர்.

TOP-20, BOWLERS, T20 RANKINGS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்