அய்யோ..! ரிஷப் பந்துக்கு மட்டும் கேப்டன்ஷி கொடுத்துறாதீங்க.. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்.. வித்தியாசமான கருத்தை சொன்ன முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை டெஸ்ட் கேப்டனாக நியமிக்க வேண்டாம் என ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.
விராட் கோலி சாதனை
சமீபத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் இந்திய டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகினார். மொத்தம் 68 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட அவர், 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். இதன்மூலம் ஆசிய அளவில் வெற்றிகரமான கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
வரலாற்று வெற்றி
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் அவர் தலைமையிலான இந்திய அணி பல வரலாற்று வெற்றிகளை பெற்றுள்ளது. அதில் குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி வரலாறு படைத்தது.
அடுத்த டெஸ்ட் கேப்டன்
விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற 2014-ம் ஆண்டு 7-வது இடத்தில் இந்திய அணியை, 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக ஜொலிக்க வைத்தார். இப்படி உள்ள சூழலில் திடீரென அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் இனி டெஸ்ட் கேப்டனாக யார் நியமிக்கப்பட உள்ளனர்? என கேள்வி எழுந்துள்ளது.
முன்னாள் வீரர்கள் கருத்து
பலரும் ரோஹித் ஷர்மா அல்லது கே.எல்.ராகுலை கேப்டனாக நியமிக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை டெஸ்ட் கேப்டனாக நியமிக்கலாம் என தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான்
இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘கேப்டனாக இருக்க நிறைய வீரர்களும், நிறைய விருப்பங்களும் வருவதற்கு இந்தியா அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை பும்ரா இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக செயல்பட தகுதியானவர். ஆனால் அதற்கு முன் அவர் ரோகித் ஷர்மா தலைமையில் ஒரு சில வருடங்கள் துணை கேப்டனாக செயல்பட வேண்டும்.
ரஹானே வேண்டாம்
அதே நேரத்தில் ரஹானேவும் சிறந்த வீரர்தான். கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் விராட் கோலி இல்லாத சமயத்தில் ரஹானே அபாரமாக கேப்டன்ஷிப் செய்தார். ஆனால் தற்போது அவரின் பேட்டிங் மோசமாக உள்ளது. ஆனாலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனாக அவரால் சிறப்பாக செயல்பட முடியும். அதனால் அவர் ரன்களை குவித்தால் மட்டும் போதும்’ என ஷேன் வார்னே கூறியுள்ளார்.
ரொம்ப பிடித்த வீரர்
தொடர்ந்து பேசிய அவர், ‘தயவுசெய்து ரிஷப் பந்தை மட்டும் கேப்டனாக மாற்றி விடாதீர்கள். எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவரை அவர் போக்கிலேயே விளையாட விடுங்கள். அவருக்கு கேப்டன்ஷி சுமையை கொடுக்காமல், சுதந்திரமாக விளையாட விட வேண்டும்.
ரிஷப் பந்த் எப்போதும் அவரது ஷ்டைலில் விளையாடுவதுதான் சிறப்பு. அவர் பார்ப்பதற்கு மிகச்சிறந்த வீரர். என்னைப் பொறுத்தவரை, விக்கெட் கீப்பர் என்பவர் கேப்டனுக்கு உதவும் துணைக் கேப்டனாகதான் இருக்க வேண்டும்’ என ஷேன் வார்னே தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்படப் போகும் முன்னணி வீரர் இவர் தான்! ரசிகர்கள் சோகம்! எப்பேர்ப்பட்ட ப்ளேயர்...
- "கங்குலி எந்த உலக கோப்பையை ஜெயிச்சு குடுத்து இருக்காரு??.." கோலியின் கேப்டன்சி விவகாரம்.. கடுப்பான ரவி சாஸ்திரி
- போன்ல பேசி சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா.. நாளுக்குநாள் பூதாகரமாக வெடிக்கும் சர்ச்சை.. முன்னாள் கேப்டன் சொன்ன முக்கிய அட்வைஸ்..!
- விராட் கோலி விஷயத்தில் பிசிசிஐ எடுத்த முடிவு.. இப்டி எல்லாம் பண்ணா தோக்க தான் செய்வீங்க.. கொதித்து எழுந்த முன்னாள் பாக். வீரர்
- திடீரென கே.எல்.ராகுலை கூப்பிட்டு ‘அட்வைஸ்’ பண்ண கோலி.. அப்படின்னா பாகிஸ்தான் வீரர் சொன்னது உண்மையா..?
- ஆக்ரோஷத்தில் கோலி சொன்ன வார்த்தை.. மைக்கில் பதிவான ஆடியோ.. "என்னங்க இப்டி பேசி வெச்சுருக்காரு??"
- நான் அப்படி ஏதும் பண்ணல.. கடுப்பான கங்குலி??.. மீண்டும் வெடித்த கோலி - பிசிசிஐ விவகாரம்
- தோல்வியிலும் கோலிக்கு மட்டும் நடந்த ‘நல்ல’ விஷயம்.. 4 வருசத்துக்கு முன்னாடி பண்ண தரமான சம்பவம் ஞாபகம் இருக்கா..?
- VIDEO: ரிஷப் பந்த் அதிரடியை பார்த்துட்டு கோலி செஞ்ச செயல்.. தலைவன் எப்பவுமே தனி ரகம் தான்யா..!
- இதோட கோலி 14 தடவை ‘டக் அவுட்’ ஆகியிருக்காரு.. ஆனா இப்படி ‘அவுட்’ ஆகுறது இதுதான் முதல் தடவை.. மோசமான ரெக்கார்டு..!