இதுல எப்படிங்க இவர் பேரை ‘மிஸ்’ பண்ணீங்க..? ஹர்பஜன் சிங் வெளியிட்ட லிஸ்ட்.. கொதித்த ‘கோலி’-ன் ரசிகர்கள்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கால் விராட் கோலியின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்திய அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி அடைந்துள்ளது. அதில், முதல் இரண்டு போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்தது. இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா தவறவிட்டது.
இந்த டி20 உலகக்கோப்பை தொடருடன், இந்திய டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். அதன்படி இந்தியா தனது கடைசி டி20 உலகக்கோப்பை லீக் போட்டியில் இன்று (08.11.2021) நம்பீயா அணியுடன் மோதியது. இப்போட்டிதான் விராட் கோலி கேப்டனாக செயல்படும் கடைசி போட்டி என்பதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
அதன்படி இன்றைய போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நம்பீயா அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை எடுத்தது. இதனை அடுத்து விளையாடிய இந்திய அணி, 15.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் செயல் விராட் கோலி ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது. அதில், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது விருப்பமான டி20 ப்ளேயிங் லெவனை தேர்வு செய்து வருகின்றனர். அந்த வகையில், ஹர்பஜன் சிங்கும் தனது ப்ளேயிங் லெவனை அறிவித்தார்.
அதில் ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெய்ல், ஜாஸ் பட்லர், ஷேன் வாட்சன், ஏபிடி வில்லியர்ஸ், தோனி, பிராவோ, பொல்லார்டு, சுனில் நரேன், மலிங்கா, பும்ரா ஆகியோர் அடங்கிய பட்டியலை வெளியிட்டார். இதில் விராட் கோலியின் பெயர் இல்லாதது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த வீரராக இருக்கும் கோலியின் பெயரை ப்ளேயிங் லெவனில் சேர்க்காததற்காக ஹர்பஜன் சிங்கை ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆஹா இதுமட்டும் அன்னைக்கு நடந்திருக்க கூடாதா..!’ டாஸ் ஜெயிச்சதும் சிரிச்சிக்கிட்டே ‘கோலி’ சொன்ன பதில்..!
- மனுசன் பேட்டிங்கில் எல்லாம் ‘கில்லாடி’ தான்.. ஆனா அந்த விஷயத்துலதான் ‘கோலி’ கோட்டை விட்றாரு.. முன்னாள் வீரர் விமர்சனம்..!
- ‘ஏற்கனவே நிரூபிச்சிட்டாரு’.. பேசாம டி20 ‘கேப்டன்’ பதவியை இவர் கிட்ட கொடுங்க.. தினேஷ் கார்த்திக் கைகாட்டிய வீரர்..!
- VIDEO: ‘கோலிய இப்படி பார்த்து எத்தனை நாளாச்சு’.. அன்னைக்கு மேட்ச்ல இப்படியெல்லாம் பண்ணாரா..! திடீரென ‘வைரலாகும்’ வீடியோ..!
- VIDEO: என்னங்க சொல்றீங்க..! இது அவுட் கிடையாதா..? செம கடுப்பான கோலி.. சர்ச்சையில் முடிந்த அம்பயரின் முடிவு..!
- VIDEO: ரோஹித் அடிச்ச ‘பந்து’ எங்கபோய் விழுந்திருக்கு பாருங்க.. நேத்து மேட்சில் நடந்த ‘சுவாரஸ்ய’ சம்பவம்..!
- அவரை டீம்ல எடுத்ததுதான் ரொம்ப நல்ல ப்ளான்.. மொத்த அணியும் பாசிட்டிவாக மாத்திட்டாரு.. தாறுமாறாக புகழந்த கோலி..!
- ‘எந்த சந்தேகமும் இல்ல.. தோல்விக்கு இதுதான் காரணம்’.. இந்தியா செய்த ‘தவறை’ சுட்டிக்காட்டிய கம்பீர்..!
- ரோஹித் இல்ல.. இந்திய டி20 அணிக்கு ‘கேப்டன்’ இவர்தானா..? கசிந்த தகவல்..!
- கொஞ்சம் கூட அக்கறை இல்ல..‘ஐபிஎல்’ போதும்னு நெனச்சிட்டாங்க போல.. இந்திய அணியை விட்டு விளாசிய பாகிஸ்தான் வீரர்..!