ரொம்ப வருசம் ஆச்சு.. மறுபடியும் ‘இந்தியா-பாகிஸ்தான்’ இடையேயான கிரிக்கெட் தொடர் நடக்குமா..? ஐசிசி தலைமை நிர்வாகி ‘பளீச்’ பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே கிரிக்கெட் தொடர்கள் நடைபெறுவது குறித்து ஐசிசி தலைமை நிர்வாகி பதிலளித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டி என்றால் எப்போது பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில், இரு நாட்டு அரசியல் சூழல் காரணமாக ஐசிசி தொடர்களில் மட்டுமே இரண்டு அணிகளும் மோதிக்கொள்கின்றன.

கடைசியாக 2012-ம் ஆண்டு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் விளையாடியது. இதில் டி20 தொடர் சமனில் முடிந்தது. ஒருநாள் தொடரை பாகிஸ்தான் கைப்பற்றியது. இதனை அடுத்து இரு அணிகளும் கிரிக்கெட் தொடர்களில் மோதிக்கொள்ளவே இல்லை.

ஐசிசி நடத்தும் உலகக்கோப்பை தொடர்களில் மட்டுமே இரு அணிகள் மோதி வருகின்றன. அந்த வகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானும், இந்தியாவும் மோதின. அதில் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதில் இந்தியா சூப்பர் 12 சுற்றுடன் வெளியேற, பாகிஸ்தான் அரையிறுதி வரை சென்றது.

இந்த நிலையில், ஐசிசியின் இடைக்கால தலைமை நிர்வாகி ஜெஃப் அலார்டிஸ் (Geoff Allardice) நியூஸ் 18 சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடர் நடத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதில், ‘இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் இதற்கு ஒத்துக்கொள்ளும் வரை இரு அணிகளும் இடையே கிரிக்கெட் தொடர்களை நடத்துவதற்கு சாத்தியம் இல்லை. இரு நாட்டு பிரச்சனையில் ஐசிசி தலையிட முடியாது.

இப்போதைக்கு இந்த நிலைமை மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவுதான் என்றே நான் நினைக்கிறேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவும், பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால், பொதுவான மைதானத்தில் போட்டி நடத்தவே முடிவெடுத்துள்ளோம்’ என ஜெஃப் அலார்டிஸ் தெரிவித்துள்ளார்.

ICC, BCCI, INDVPAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்