"மத்த வீரர்களை போல எனக்கும் உதவி செய்யுங்க".. காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற பின்னர் வீராங்கனை வெளியிட்ட பரபரப்பு கருத்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற திவ்யா கக்ரன் பரபரப்பு  கருத்தை வெளியிட்டிருக்கிறார். இது இணையதளங்களில் பலராலும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | CWG 2022: "சாம்பியன்களின் சாம்பியன்".. சாதனை படைத்த பிவி சிந்து.. பிரதமர் மோடி வாழ்த்து..!

காமென்வெல்த் 2022

காமென்வெல்த் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் காமென்வெல்த் போட்டிகள் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் 72 நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றிருக்கின்றன. சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் கலந்துகொண்ட இந்த ஆண்டின் காமன்வெல்த் போட்டிகள் பெர்மிங்காமில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி துவங்கியது.

வெண்கல பதக்கம்

நடப்பு காமன்வெல்த் போட்டியில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த பெண்களுக்கான 68 கிலோ பிரிவில் இந்திய மல்யுத்த வீராங்கனை திவ்யா கக்ரன், ஃப்ரீஸ்டைல் பிரிவில் டோங்கா டைகர் லில்லி காக்கர் லெமாலியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றார். ஏற்கனவே மல்யுத்த போட்டிகளில் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா மற்றும் தீபக் புனியா ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், அன்ஷு மாலிக் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.

இந்நிலையில், டெல்லியை சேர்ந்த திவ்யா, தனக்கு மாநில அரசு எவ்வித உதவியையும் செய்யவில்லை எனத் தெரிவித்திருக்கிறார். இது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

உதவி கிடைக்கவில்லை

காமன்வெல்த் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற திவ்யாவுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒருவர். இந்நிலையில், திவ்யா தனது ட்விட்டர் பக்கத்தில்,"எனது வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த டெல்லி முதல்வருக்கு என் மனப்பூர்வமான நன்றி. எனக்கு ஒரு வேண்டுகோள். நான் கடந்த 20 ஆண்டுகளாக டெல்லியில் வசித்து வருகிறேன். ஆனால் நான் எந்த பரிசுத் தொகையையும் பெறவில்லை அல்லது மாநிலத்திலிருந்து எந்த உதவியும் பெறவில்லை. வேறு மாநிலங்களுக்காக விளையாடும் டெல்லி வீரர்களுக்கு தரப்படும் கவுரவம் எனக்கும் அளிக்கப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

அரசு அளித்த பதில்

இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுக்கு டெல்லி அரசு பதில் அளித்திருக்கிறது. அந்த அறிக்கையில்,"டெல்லி அரசு நாட்டின் அனைத்து விளையாட்டு வீரர்களையும் மதிக்கிறது மற்றும் அவர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக பிரார்த்தனை செய்கிறது. தற்போது, திவ்யா கக்ரன் உத்தரபிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். அவர் டெல்லியில் இருந்து விளையாடியிருந்தால் அல்லது அரசாங்கத்தின் ஏதேனும் விளையாட்டுத் திட்டத்தில் அங்கம் வகித்திருந்தால் அல்லது அத்தகைய திட்டத்தில் விண்ணப்பித்திருந்தால், அரசாங்கம் அதை நிச்சயமாக கவனத்தில் எடுத்துக்கொள்ளும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read | "எதுக்கு எக்ஸ்ட்ரா 5ரூ கொடுக்கணும்?".. வாட்டர் பாட்டில் வாங்குனப்போ வந்த தகராறு.. ஓடுற ரயிலில் இளைஞருக்கு நிகழ்ந்த பயங்கரம்..!

CWG BRONZE MEDALIST, ARVIND KEJRIWAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்