'வானத்தை போல'... 'படத்தை போல தான் நாங்க'... எங்களுக்குள்ள 'போட்டி எல்லாம் இல்ல'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணி குறித்தும் ஹர்திக் பாண்ட்யா குறித்தும் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில், தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.ஆல்ரவுண்டரான விஜய்,நான்காவது இடத்தில் களமிறங்கலாம் என பரவலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் 4-வது வீரருக்காக ரேஸில் விஜய் சங்கர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரும் உள்ளனர். இதனிடையே ஹர்திக் பாண்ட்யாயுடன் போட்டியா என்ற கேள்விக்கு விஜய் சங்கர் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர் ''ஹர்திக் பாண்ட்யாயுடன் நான் போட்டிப் போட எந்த அவசியமும் இல்லை.நாங்கள் இருவரும் ஆல்ரவுண்டராக இருந்த போதும் களத்தில் நாங்கள் ஆடும் திறன் என்பது வேறு. அவர் அதிரடியாக ஆடக்கூடியவர்.எனேவ எங்களுக்குள் எந்த வித போட்டியும் இல்லை.இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே எங்கள் அனைவருக்கும் இருக்கும் ஒரே எண்ணம்.மேலும் எனது சிறுவயது பயிற்சியாளரிடம் பேட்டிங் குறித்து பல விஷயங்களை விவாதித்து இருக்கிறேன். அவர் எனக்கு பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்''.

மேலும் பேசிய அவர் ''நான் கொஞ்சம் அமைதியான சுபாவம் கொண்டவன். களத்தில் எனக்கு ஏதாவது சந்தேகம் என்றால், தயங்காமல் தோனி மற்றும் கோலியிடம் சென்று ஆலோசனை கேட்பேன். அவர்களும் என்னுடைய கேள்விகளுக்கு மகிழ்ச்சியாகப் பதிலளிப்பார்கள்'' என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்