Elon Musk : "வேற வழியில்ல"... ட்விட்டர் ஆட்குறைப்பு உண்மையா? மஸ்க் வெளியிட்ட பரபரப்பு தகவல்.

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகின் மிகப்பெரிய பணக்காரரும் தொழிலதிபருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதனை தொடர்ந்து பல பரபரப்பான தகவல்கள் தினந்தோறும் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 

Advertising
>
Advertising

அமெரிக்காவில் வசித்துவரும் சேர்ந்த எலான் மஸ்க் 1971 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பிறந்தார். இவர், விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ், முன்னணி எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா ஆகியவற்றை நடத்தி வருகிறார். போர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலக பணக்காரர்களின் பட்டியலில் எலான் மஸ்க் டாப்பில் இருக்கிறார். 

முன்னதாக 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மஸ்க் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், போலி கணக்குகள் பற்றி தகவல்களை ட்விட்டர் நிறுவனம் வெளியிடவில்லை எனக்கூறி நிறுவனத்தை வாங்கும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார் மஸ்க். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்திற்கு செல்ல இருப்பதாக ட்விட்டர் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்த சூழலில் ட்விட்டரை கைப்பற்றி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார் மஸ்க்.

ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் கைப்பற்றியதில் இருந்து உயர்மட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது, நிர்வாக அதிகாரிகளின் குழுவை கலைத்தது என மஸ்க் குறித்த பல பரபரப்பான தகவல்கள் வெளியாகி வந்தன.  இதுதொடர்பாக அதிகாலை 4 மணி வாக்கில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட குறிப்பிட்ட அந்த இ-மெயிலில் ட்விட்டரின் கட்டமைப்புகளை அணுகக்கூடிய வசதிகள், ஸ்லாக் மற்றும் அதிகாரப்பூர்வ இமெயில் உள்ளிட்டவற்றை அணுகக்கூடிய வசதிகள் ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

உலகம் முழுவதும் இருக்கும் ட்விட்டர் ஊழியர்கள் திடீரென இந்த பணிநீக்க நடவடிக்கைக்கு ஆளானதாக தொடர்ச்சியான தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில்தான் இதற்கு தற்போது எலான் மஸ்க் விளக்கம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பான தன்னுடைய விளக்கத்தில், “ட்விட்டர் நிறுவனத்துக்கு ஒவ்வொரு நாளும் 4 மில்லியன் டாலர் இழப்பு உண்டாகிறது. எனவே ஆட்குறிப்பு செய்வதுதான் இப்போது இருக்கும் வழி. வேறு வழியில்லை. அத்துடன் 3 மாதங்களுக்கான பணி நீக்க ஊதியமும் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. சட்ட பிரகாரம் ஊழியர்களுக்கு தேவையானதை விட 50 சதவீதம் இந்த பணி நீக்க ஊதியம் என்பது அதிகமே” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

ELON MUSK, NO CHOICE, TWITTER EMPLOYEES, TWITTER LAYOFF

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்