‘டெல்லியில் ஐபிஎல் போட்டிகள் நடக்காது’... ‘டெல்லி துணை முதல்வர் அறிவிப்பு’... விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் டெல்லியில், ஐபிஎல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளை நடத்த தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இன்று மதியம் நிருபர்களை சந்தித்தபோது இந்த தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது, ‘கொரோனா வைரஸ் தொற்றுநோயை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுக்கிறோம். ரசிகர்கள் அதிகம் கூடும் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் உள்ளிட்ட எந்த ஒரு விளையாட்டு போட்டிகளையும், டெல்லி அரசு நடத்த அனுமதிக்காது.
நீச்சல் குளங்கள் மூடப்படுகின்றன. ரசிகர்கள் அதிகம் கூடினால் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. இதனால் விளையாட்டு நடவடிக்கைகள், கருத்தரங்குகள், மாநாடுகள் இங்கு ஏற்பாடு செய்யப்படாது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மக்கள் ஒருவருக்கொருவர் இடைவெளியை பராமரிக்க வேண்டும்’ என்று அவர் கூறியுள்ளார்.
வரும் மார்ச் 29-ம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்க உள்ள நிலையில், டெல்லி அரசு இவ்வாறு கூறியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடத்தலாமா வேண்டாமா அல்லது ரசிகர்கள் இன்றி இண்டோரில் நடத்தலாமா என நாளை ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுவதாக இருந்தது. முன்னதாக கொரோனா அச்சுறுத்தலால் வணிக வளாகங்கள், பள்ளிகள், திரையரங்குகள் உள்ளிட்டவைகள் டெல்லியில் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கை தட்டல்கள்', 'ஆரவாரங்கள்' இல்லாமல் ... சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ... முதல் முறையாக நடந்த சம்பவம் !
- 'கைய நல்லா கழுவ சொல்றீங்க'... 'சென்னையில தண்ணீருக்கு எங்க போவோம்'?... ஐகோர்ட்டில் வழக்கு!
- 'கனடா பிரதமரின் மனைவிக்கு கொரோனா'?... 'அதிர்ச்சியில் மக்கள்'... வைரலாகும் ட்விட்டர் பதிவு!
- ‘ஸ்பெஷல் தரிசனம் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு’... ‘திருப்பதி தேவஸ்தானத்தின் அதிரடி புதிய தகவல்’!
- நல்லவேளை 'இந்தியாவுல' கொரோனா உருவாகல... 'மட்டம்' தட்டிய பொருளாதார நிபுணர்... வெடித்தது புது சர்ச்சை!
- ‘கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க ரெண்டு வழிதான் இருக்கு...’ ‘மருந்து கண்டுபிடிக்க கண்டிப்பா...’ மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்...!
- VIDEO: 'ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட 1 லட்சம் முகமூடிகளை... கழுவி, காயவைத்து மீண்டும் விற்பனை!'... கொரோனாவால் ஏற்பட்ட முகமூடி தட்டுப்பாடு!... இளைஞர் செய்த பதைபதைக்க வைக்கும் காரியம்!
- VIDEO: 'கொரோனா கண்காணிப்பு முகாம்' இடிந்து விழுந்து... 26 பேர் பலி!... இதயத்தை ரணமாக்கும் சோகம்!
- 'பல்லாயிரம்' மக்கள் திரண்டிருந்த மைதானம் ... ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட கொரோனா ...
- ஒரே ‘போன்’ கால் தான்... பதறிப்போய் ‘3 நாட்களுக்கு’ மொத்த அலுவலகத்தையும் இழுத்து ‘மூடிய’ நிர்வாகம்... ‘கடைசியாக’ காத்திருந்த ‘அதிர்ச்சி’ ட்விஸ்ட்...