தொடர் தோல்வியால் துவண்டு போன MI அணி.. நீட்டா அம்பானி அனுப்பிய ஆடியோ மெசேஜ்.. என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தொடர் தோல்விகளை சந்தித்து வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதன் உரிமையாளர் நீட்டா அம்பானி உருக்கமான தகவல் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

சென்னையில் இருந்து டெம்போ வேனில் சொந்த ஊருக்கு சென்ற குடும்பம்.. உளுந்தூர்பேட்டை Toll gate அருகே அதிர்ச்சி..!

புனேவில் நேற்று முன்தினம் நடந்த ஐபிஎல் தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 4-வது தோல்வியை மும்பை அணி சந்தித்துள்ளது. மேலும் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்கு அந்த அணியின் உரிமையாளர் நீட்டா அம்பானி ஆடியோ மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘எனக்கு உங்கள் அனைவரின் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. நாம் வெற்றி பெறுவோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன். இனி நாம் உயரப் போகிறோம். நாம் வெல்வோம் என்பதை நாம் நம்ப வேண்டும். இதற்கு முன்பு பலமுறை இந்த நிலையில் நாம் இருந்திருக்கிறோம். பின்னர் அதிலிருந்து மீண்டு கோப்பையை வென்றுள்ளோம்.

நீங்கள் நம்பிக்கையுடன் இருந்தால் நிச்சயம் நம்மால் கோப்பையை வெல்ல முடியும். நான் உங்களை மீண்டும் சந்திப்பேன். நீங்கள் எதை விரும்பினாலும் உங்கள் அனைவருக்கும் எனது முழு ஆதரவு உண்டு. தயவுசெய்து ஒருவரை ஒருவர் நம்புங்கள், உங்கள் மீது நம்பிக்கை வைத்துக்கொள்ளுங்கள். மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும்’ என நீட்டா அம்பானி கூறியுள்ளார்.

கடந்த 2015-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் 4 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. ஆனால் தோல்வியில் இருந்து மீண்டெழுந்த மும்பை அணி, இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

“ஜடேஜாவுக்கு பதிலா அவரை தான் CSK கேப்டனா போட்டிருக்கணும்”.. யாரும் யோசிக்காத வீரரை கைகாட்டிய ரவி சாஸ்திரி..!

 

NITA AMBANI, MI, MUMBAI INDIANS, MUMBAI INDIANS OWNER NITA AMBANI, நீட்டா அம்பானி, ஆடியோ மெசேஜ்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்