Watch Video: என்னால கண்ட்ரோல் பண்ண 'முடில'.. 'பேட்டிங்' பண்ணிட்டு இருக்கப்ப.. திடீர்னு 'ஓடுன' வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

 ஐசிசி டி20 உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அபுதாபியில் நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் கனடா-நைஜீரியா அணிகள் மோதின.

இந்த போட்டியில் நைஜீரியா 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது நைஜீரிய வீரர் ரன்ஸ்ஈவ் 18 எடுத்திருந்த நிலையில் திடீரென டிரெஸ்ஸிங் ரூமுக்கு ஓடினார். நீண்ட நேரமாகியும் அவர் வராததால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை நைஜீரிய அணி களமிறக்கியது.

ஆனால் ரன்ஸ்ஈவ் டிரெஸ்ஸிங் ரூமில் இருந்து தனது பேடை அட்ஜஸ்ட் செய்துகொண்டு மீண்டும் களத்துக்கு வந்தார். தொடர்ந்து நடுவர் அவரை மீண்டும் களமிறங்க சொல்ல, ரன்ஸ் விட்ட இடத்திலிருந்து தனது ஆட்டத்தை தொடர்ந்தார். அவர் பாத்ரூமுக்கு சென்றார் என்ற விவரம் பின்னர் தெரியவர, அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

நைஜீரியாவிற்கு எதிரான இந்த போட்டியில் கனடா அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் விளையாடிய கனடா அணி 20 ஓவர்கள் முடிவிற்கு 7 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய நைஜீரிய அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்