‘ஒரு மூத்த வீரர் இப்படியா பேசுறது..!’.. பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் குறித்து ‘ஆபாச’ கமெண்ட்.. சிறப்பான, தரமான ‘பதிலடி’ கொடுத்த வீராங்கனை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் வீராங்கனைகள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரஸாக்கிற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

பாகிஸ்தான் முன்னாள் ஆல்ரவுண்டர் அப்துல் ரஸாக், சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் ஆண் வீரர்களைபோல இருக்க எண்ணுகின்றனர். தாங்களும் ஆண் வீரர்களுக்கு சரிசமமாக இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். எந்தொரு சாதனையாக இருந்தாலும், ஆண்கள் மட்டுமல்ல தங்களாலும் அதை செய்ய முடியும் என்பதை நிரூபிக்க முயல்கிறார்கள்.

ஆனால் இவ்வாறு செல்கையில், அவர்களிடையே திருமணம் செய்து கொள்வது குறித்த உணர்வே இல்லாமல் போய்விடுகிறது. இன்னும் சொல்லவேண்டுமென்றால், அவர்களின் கையைப் பிடித்தால் பெண் என்ற உணர்வே உங்களுக்கு இருக்காது’ என மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் குறித்து அப்துல் ரஸாக் ஆபாசமாக பேசியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில் பாகிஸ்தான் வீராங்கனை நிடா தார், அப்துல் ரஸாக்கின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், ‘எங்களது தொழிலில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திற்காகவும் ஃபிட்னஸுடன் இருக்க வேண்டும். அதனால் உடல் உறுதியாக மாறுகிறது. ஆமாம், எங்கள் உடல் இறுக்கமாகதான் இருக்கும். நான் கிரிக்கெட் வீராங்கனையாக ஆகவில்லை என்றாலும், விளையாட்டு தொடர்பான ஏதாவது ஒரு பிரிவில்தான் இருந்திருப்பேன்’ என நிடா தார் கூறியுள்ளார். தற்போது அப்துல் ரஸாக்கின் பேச்சுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்து வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்