146 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 2 ஆவது முறை.. 1 ரன்னில் நடந்த மேஜிக்.. நியூசிலாந்து அணியின் தரமான சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து தான் தற்போது கிரிக்கெட் உலகமே பேசிக் கொண்டிருக்கிறது.

Advertising
>
Advertising

                              Images are subject to © copyright to their respective owners.

Also Read | காணாமல் போன மாடல் அழகி.. ஃப்ரிட்ஜில் இருந்த கால்கள்?.. கதிகலங்கி நின்ற போலீஸ்.. என்ன நடந்தது?

இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோதுவதற்காக நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது இங்கிலாந்து கிரிக்கெட் அணி.

இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி போட்டியும் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 435 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளர் செய்திருந்தது.

இதனையடுத்து முதல் இன்னிங்சில் ஆடிய நியூசிலாந்து அணி, 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் பாலோ ஆன் ஆகி இருந்த நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணியின் கை அதிகம் ஓங்கி இருந்ததால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று பலரும் கருதினர். ஆனால் இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி சிறப்பாக ஆடி ரன் சேர்த்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 132 ரன்களும், டாம் பிளெண்டல் 90 ரன்களும், லதாம் 83 ரன்களும் எடுத்திருந்த சூழலில், நியூசிலாந்து அணி 483 ரன்கள் எடுத்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners. 

தொடர்ந்து 258 ரன்கள் என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சில் ஆடிய இங்கிலாந்து அணி, சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. மேலும் 215 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி இழந்த சூழலில், கடைசி இரண்டு விக்கெட்டுகளில் அந்த அணியின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.

அப்படி இருக்கையில் 251 ரன்னுக்கு 9 ஆவது விக்கெட்டும் போக கடைசி விக்கெட்டிற்கு 7 ரன்கள் எடுக்க வேண்டும் என்பதால் இரு அணிக்கும் வெற்றி வாய்ப்பு உருவானது. இதனால் போட்டிக்கு இடையில் கடும் விறுவிறுப்பும் ஏற்பட்டிருக்க யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் போட்டியையும் ரசிகர்கள் பார்த்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில், 256 ரன்களில் கடைசி விக்கெட்டை இங்கிலாந்து அணி இழக்க, ஒரு ரன் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது நியூசிலாந்து அணி. இதன் காரணமாக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் தற்போது சமனில் முடிந்துள்ளது.

டெஸ்ட் போட்டியில் இப்படி ஒரு விறுவிறுப்பான முடிவு நடந்ததை பற்றி தான் கிரிக்கெட் உலகமே பேசி வருகின்றது. அதே போல, 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் ஒரு அணி வெற்றி பெறுவது இது இரண்டாவது முறை தான். இதற்கு முன்பு கடந்த 1993 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணியை ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீழ்த்தி இருந்தது. அதற்குப் பிறகு தற்போது தான் நியூசிலாந்து அணி, இங்கிலாந்து அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Also Read | 10 ரன்னுக்கு ஆல் அவுட்டான அணி.. 2வது பேட்டிங்கில் எதிரணி செய்த தரமான சம்பவம்.. சுவாரஸ்ய பின்னணி!!

CRICKET, NEWZEALAND TEST TEAM, ENGLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்