“இந்திய அணியில ‘இவரை’ சமாளிக்கிறதுதான் கஷ்டம்… என்னோட திட்டமே வேற..!”- எதிர் அணியின் மாஸ்டர் ப்ளான்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா- நியூசிலாந்து இடையேயான டி20 போட்டியில் 3-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதையடுத்து வருகிற நவம்பர் 25-ம் தேதி முதல் இந்தியா- நியூசிலாந்து மோதும் டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் இரண்டு போட்டிகள் கொண்டது.

Advertising
>
Advertising

இந்திய அணியில் பந்துவீச்சாளர் அஸ்வினை சமாளித்து விளையாடுவது தான் பெரிய சவால் என்றும் அவரை சமாளிப்பதற்கான தனது திட்டங்களை ரகசியமாக வைத்துக்கொள்ளப் போவது என்றும் நியூசிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசை எப்படி அமையப் போகிறது என்றும் தனக்கு யோசனையாக இருப்பதாகவும் டெய்லர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஸ் டெய்லர் மேலும் கூறுகையில், “அஸ்வினை நான் எப்படி சமாளிக்கப் போகிறேன் என்ற கேள்விக்கு நான் பதில் அளிக்கப் போவது இல்லை. அதை ரகசியமாகவே வைத்துக்கொள்ளப் போகிறேன். எந்த வரிசையில் எப்படிப்பட்ட பவுலர்களை இந்தியா களம் இறக்கப் போகிறது எனத் தெரியவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அக்சர் படேலின் பந்துவீச்சு இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம் ஆக இருந்தது.

வருகிற முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணியின் நம்பிக்கை பவுலர் ஆன அஸ்வின் நிச்சயம் களம் இறக்கப்படுவார். நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் இடையேயான போட்டி நிச்சயம் கடுமையாக இருக்கப் போகிறது. நியூசிலாந்து டெஸ்ட் தொடரிலேயே இதுதான் முக்கியப் பங்கு வகிக்கும்.

அநேகமாக, இந்திய அணி 2 அல்லது 3 சுழற்பந்து வீச்சாளர்களை இறக்கும். அதில் நிச்சயம் அஸ்வின் ஒருவராக இருப்பார். தற்போதைய சூழலில் இந்திய பவுலர்கள் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார்கள். அவர்களை எப்படி நாங்கள் பேட்ஸ்மேன்கள் சமாளிக்கப் போகிறோம் என்பதில் தான் அந்தப் போட்டியே இருக்கப் போகிறது. இந்திய அணியில் புது மற்றும் பழைய பந்துகளில் என இரண்டிலுமே சிறப்பாக ஆடக்கூடிய பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

அதனால் டெஸ்ட் தொடர் வெற்றி இந்திய பவுலர்களிடம் தான் இருக்கப் போகிறது. அதனால் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இந்திய பவுலர்கள் மீது அழுத்தம் தர வேண்டியது இருக்கும். என்னால் முடிந்த வரையில் நானும் அதைச் செய்வேன். முக்கியமாக சுழற்பந்துகளில் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

CRICKET, INDVSNZ, TEST SERIES, ASHWIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்