‘ஆமா அவங்களுக்கு அது சாதகம்தான், ஆனா அத நெனச்சு எங்களுக்கு கவலையில்ல’!.. WTC Final குறித்து புஜாரா ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து இந்திய அணியின் பேட்ஸ்மேன் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 3-ம் தேதி தனி விமானம் மூலம் இந்திய அணி இங்கிலாந்து சென்றது. அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின் இந்திய வீரர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர். அதில் இந்திய வீரர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள புஜாரா, இப்போட்டி குறித்து பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், ‘டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்பாக நியூஸிலாந்து அணி இங்கிலாந்து மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. இது நிச்சயம் அவர்களுக்கு சாதகமான ஒன்றாக இருக்கும்.
ஆனால் இறுதிப்போட்டி என்று வரும்போது நாங்கள் எங்களுடைய மிகச்சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்துவோம். நன்றாக விளையாடி கோப்பையை வெல்வதற்குரிய திறமை எங்கள் அணியிடம் உள்ளது. அதனால் மற்ற விஷயங்களை பற்றி கவலையில்லை. தற்போது எங்களுக்குள் இரு அணிகளாக பிரிந்து பயிற்சி ஆட்டத்தில் விளையாடி எங்களை தயார்படுத்தி வருகிறோம்’ என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘இங்கிலாந்து மண்ணில் ஒரே நாளில் வெவ்வேறு சீதோஷ்ண நிலையில் விளையாடுவது ஒரு பேட்ஸ்மேனாக மிகவும் சவாலாக இருக்கும். அதாவது திடீரென மழை குறுக்கிட்டு போட்டி தடைபட்டு, பின்னர் மீண்டும் பேட்டிங் செய்யும் போது நீங்கள் சூழலை சரியாக புரிந்து கொண்டு விளையாட வேண்டியது அவசியம். மனரீதியாக வலுவாக இருக்க வேண்டும். அப்போது தான் சாதிக்க முடியும்’ என புஜாரா தெரிவித்துள்ளார்.
முன்னதாக நியூஸிலாந்து அணி, இங்கிலாந்துக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி நியூஸிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் நியூஸிலாந்து அணிக்கு கிடைத்துள்ளது. இது அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- WTC Final-ல் நியூஸிலாந்துக்கு ‘செம’ டஃப் காத்திருக்கு.. இந்திய வீரர்களின் ‘வெறித்தனமான’ ப்ராக்டீஸ் வீடியோ..!
- WTC Final-ல் இவர் இல்லாம எப்படி..? நியூஸிலாந்து அணிக்கு வந்த புதிய பிரச்சனை.. கேப்டன் விளையாடுவதில் சிக்கல்..?
- ‘கொரோனா காரணமாகதான் அவங்களை நியமிக்கல’!.. WTC final-க்கு எலைட் குழு அம்பயர்கள்.. ஐசிசி அதிரடி அறிவிப்பு..!
- ‘கப்பு முக்கியம் பிகிலு’!.. தனி ஒருவனாக வெறித்தனமான ப்ராக்டீஸ்.. ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ‘ஸ்டார்’ ப்ளேயர்..!
- விவிஎஸ் லக்ஷ்மண் கூட ‘இதைதான்’ சொன்னாரு.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூஸிலாந்துக்கு இருக்கும் ‘சாதகமான’ சூழல்.. யுவராஜ் சிங் அதிரடி கருத்து..!
- ‘வெற்றியை தீர்மானிக்க போறவங்க இவங்கதான்’!.. நியூஸிலாந்துக்கு இருக்கும் ஒரு ‘ப்ளஸ்’ பாண்ட்.. விவிஎஸ் லக்ஷ்மண் போடும் ‘புது’ கணக்கு..!
- கேன் வில்லியம்சனை அவுட்டாக்க ‘மாஸ்டர்’ ப்ளான்.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இப்பவே ‘ஸ்கெட்ச்’ போடும் இந்திய இளம் வீரர்..!
- ‘பார்த்தாலே வெறலெவல்ல இருக்கே’!.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா அணியபோகும் ஜெர்சி.. ரசிகர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த பிசிசிஐ..!
- ஒருவேளை மேட்ச் டை அல்லது டிரா ஆனால் யார் வின்னர்..? டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் பற்றி ‘ஐசிசி’ அதிரடி அறிவிப்பு..!
- VIDEO: தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டல் ‘ரூம்’ எப்படி இருக்கு..? வீடியோ வெளியிட்ட வாசிங்டன் சுந்தர்..!