VIDEO: கொஞ்சம் முன்னாடியே கேட்டிருந்தா அவுட்டில் இருந்து தப்பிச்சு இருக்கலாம்.. சர்ச்சையான விக்கெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில், கடந்த 25-ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 345 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அதேபோல் நியூசிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் 296 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து மேட்ச் டிரா என அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தின் போது நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் அவுட்டானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் முதல் இன்னிங்ஸில் 89 ரன்கள் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய வில் யங், இரண்டாவது இன்னிங்ஸிலும் அதே ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

அப்போது அஸ்வின் வீசிய ஓவரில் வில் யங்கின் காலில் பந்து பட்டுச் சென்றது. உடனே இந்திய வீரர்கள் அம்பயரிடம் எல்பிடபிள்யூ முறையிட்டனர். உடனே அம்பயரும் அவுட் கொடுத்துவிட்டார். இதனால் எதிர்முனையில் இருந்த டாம் லதாமிடம் வில் யங் ஆலோசனை கேட்டார். ஆனால் அதற்குள் ரிவ்யூ கேட்பதற்கான நேரம் முடிந்துவிட்டது.

இதனை அடுத்து ரீப்ளேவில் பார்த்தபோது பந்து ஸ்டம்பை விட்டு விலகிச் சென்றது தெரியவந்தது. ஆனால் வில் யங் ரிவ்யூ கேட்க தாமதமானதால் அவுட்டாகி வெளியேறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

RAVICHANDRAN ASHWIN, WILLYOUNG, INDVNZ, DRS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்