‘கங்குலியின் 25 ஆண்டுகால சாதனை முறியடிப்பு’!.. அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்தை ‘அலறவிட்ட’ நியூஸிலாந்து வீரர்.. அப்போ இந்தியாவுக்கு செம ‘டஃப்’ கொடுப்பார் போலயே..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணியின் அறிமுக வீரர் டெவன் கான்வே சதம் அடித்து அசத்தினார்.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி டாம் லாதம் மற்றும் அறிமுக வீரர் டெவன் கான்வே களமிறங்கினர்.
இதில் 23 ரன்கள் எடுத்திருந்தபோது ஒல்லி ராபின்சன் ஓவரில் போல்டாகி டாம் லாதம் அவுட்டாகினார். இதனை அடுத்து களமிறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 13 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார். இவரை தொடர்ந்து வந்த ராஸ் டெய்லரும் 14 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார்.
இப்படி மூத்த வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் அவுட்டாகி வெளியேறினாலும், மறுமுனையில் அறிமுக வீரர் டெவன் கான்வே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இதனால் 240 பந்துகளில் 136 அடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 246 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்துள்ளது.
மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் 25 ஆண்டுகால சாதனையை டெவன் கான்வே முறியடித்துள்ளார். கடந்த 1996-ம் ஆண்டு இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இடதுகை பேட்ஸ்மேனான கங்குலி தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் (131) அடித்து அசத்தினார். தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் டெவன் கான்வே 136 ரன்கள் அடித்ததன் மூலம் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘அந்த பவுலர்தான் நமக்கு சவாலா இருக்க போறார்’!.. ‘இதை மட்டும் சரியா பண்ணிட்டா நாம ஜெயிச்சிறலாம்’.. அஸ்வின் கணிப்பு..!
- 89 வருசத்துக்கு பிறகு ‘முதல்முறையா’ இந்தியா இப்படியொரு போட்டியில் விளையாட போகுது.. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நடக்கவுள்ள சுவாரஸ்யம்..!
- ‘3 மாத சுற்றுப்பயணம்’!.. 2 விக்கெட் கீப்பர் போதாது, இன்னொருத்தர் வேணும்.. பிசிசிஐ எடுத்த ‘சூப்பர்’ முடிவு..!
- ஒருவேளை டெஸ்ட் சாம்பியன்ஷிப் டிரா அல்லது டை ஆனால் யார் வின்னர்..? ரசிகர்கள் முன்வைத்த ‘முக்கிய’ கேள்வி..!
- கேப்டன் பொறுப்பை தோனி கொடுத்தபோது ‘கோலி’ சொன்ன அந்த வார்த்தை.. சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிய ‘கிங்’ கோலி..!
- நல்ல பவுலருக்கு இப்படி ஒரு சோதனையா?.. கைவிட்ட பிசிசிஐ!.. கேள்விக்குறியான எதிர்காலம்!.. என்ன செய்யப்போகிறார் புவி?
- ‘இது மட்டும் கன்ஃபார்ம் ஆச்சுனா.. உங்க இங்கிலாந்து டூர் அதோட முடிஞ்சதுன்னு நினச்சிக்கோங்க’!.. வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை..!
- 'இதுக்கு பேரு கிரிக்கெட்டா?.. நீங்க எல்லாம் தயவு செஞ்சு இனிமே கிரிக்கெட் விளையாடாதீங்க'!.. கொந்தளித்த முன்னாள் வீரர்கள்!!
- ‘சிக்கனே இல்லாத சிக்கன் பிரியாணி மாதிரி இருக்கு உங்க டீம் செலக்சன்’!.. ஏங்க அவர் பெயர் லிஸ்ட்ல இல்லை?.. சரமாரியாக கேள்வி எழுப்பும் ரசிகர்கள்..!
- கண்ணீர்விட்டு அழுத ரவி சாஸ்திரி... உணர்ச்சி வசப்பட்ட ரிஷப் பந்த்!.. இந்திய அணியை உருகைவத்த சம்பவம்!