என்னதான் ‘ஆள்’ இல்லன்னாலும் ‘அதுக்குனு’ இப்படியா?... வீரர்கள் ‘பற்றாக்குறையால்’ அணி செய்த காரியம்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி சார்பில் மாற்று வீரராக பயிற்சியாளர் லூக் ரோங்கி களமிறங்கியுள்ளார்.
நியூசிலாந்து - இந்தியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடந்து முடிந்துள்ளது. போட்டியில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 251 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி இந்தத் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் தோள்பட்டை காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியுள்ள நிலையில், மற்றொரு வீரரான ஸ்காட் கக்கலீஜினும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் போட்டியில் களமிறங்கவில்லை. இந்தப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அறிவித்த ஒரே மாற்று வீரரான மிட்சல் சாண்ட்னரும் உடல்நிலை சரியில்லாததால் களமிறங்காத நிலையில், வீரர்கள் பற்றாக்குறை காரணமாக அந்த அணியின் பயிற்சியாளர் லூக் ரோங்கி இந்தப் போட்டியில் மாற்று வீரராகக் களமிறங்கியுள்ளார். இவர் கடைசியாக 2017ஆம் ஆண்டு அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.
ஆனால் இதுபோல பயிற்சியாளர் போட்டியில் களமிறங்குவது இது முதல் முறையல்ல. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரிலும் நியூசிலாந்து அணியின் வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டதால் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பீட்டர் புல்டன் பீல்டிங் செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அந்த பையன பாத்து நானே ஷாக் ஆயிட்டேன்'... 'ஆச்சரியத்தில் உறைந்த சச்சின்'... யார் அந்த வீரர்?
- அவருக்கு 'நெறைய' வாய்ப்பு குடுக்கணும்... களத்தில் 'குதித்த' மூத்தவீரர்... எது இன்னமுமா? இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா!
- ஐபிஎல்லில் இருந்து 'திடீரென' விலகிய முன்னணி வீரர்... அவர் கண்டிப்பா 'வருவாரு'... நாங்க 'வெயிட்' பண்றோம்!
- அடக்கடவுளே! 'காயத்தால்' அவதியுறும் முன்னணி வீரர்?... மோசமான 'சாதனைக்கு' காரணம் இதுதானாம்!
- அந்த 'ரெண்டு' பேரையும் தட்டித் தூக்குறோம்... நியூசிலாந்தை ஜெயிக்குறோம்... 'டக்கரான' பிளானுடன் களமிறங்கும் கேப்டன்?
- 'டியர் 90ஸ் கிட்ஸ், இந்த மேட்ச் உங்களுக்கு நியாபகம் இருக்கா?'... பாகிஸ்தானை மிரள வைத்து... கும்ப்ளே சாதனை படைக்க ஸ்ரீநாத் செய்த உதவி!... அன்றைய மேட்ச்சில் நடந்தது என்ன?
- 'இத பண்ணுங்க ஈஸியா ஜெயிக்கலாம்!'... நியூசிலாந்தை வீழ்த்த ஹர்பஜன் சொன்ன ஐடியா!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- சத்தமே இல்லாம ‘இறுதிப்போட்டிக்கு’ நுழைந்த அணி.. U19 உலகக்கோப்பையில இந்தியா யாரோட மோதப்போறாங்க தெரியுமா..?
- 'இந்த' வருஷத்தோட இவங்க 5 பேரும்... 'ரிட்டையர்மெண்ட்' அறிவிக்க... எக்கச்சக்க 'வாய்ப்புகள்' இருக்காம்!