அப்படியெல்லாம் ‘அவர்’கிட்ட இருந்து தப்பிச்சிட முடியாது..!- இங்கிலாந்து பேட்ஸ்மேனை மிரட்டிய நம்ம ‘பவுலர்’ யார் தெரியுதா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் ‘இந்த’ பந்துவீச்சாளரின் பந்துகளில் இருந்து தப்பிப்பது மட்டும் ரொம்ப கஷ்டம்தான் என நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதிய நேற்றைய டி20 போட்டியில் இந்திய அணி தனது அபார ஆட்டத்தால் வெற்றி பெற்றது.

Advertising
>
Advertising

நேற்றைய போட்டியில் இந்திய அணியில் ரோகித் சர்மா- சூர்யகுமார் யாதவ் கூட்டணி வெற்றியை உறுதி செய்தது. பந்துவீச்சிலும் இந்திய பவுலர்கள் நியூசிலாந்தை தொடக்கத்தில் இருந்தே கட்டுக்குள் வைத்திருந்தனர். பந்துவீச்சாளர்களைப் பொறுத்த வரையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நேற்றைய போட்டியில் நல்ல பாராட்டுகள் கிடைத்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 4 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட்டின் குறுகிய கால போட்டிகளில் விளையாடத் தொடங்கி உள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரின் மூலமாக அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிரான ஜெய்பூர் போட்டியில் தனக்கான இடத்தை நிலை நிறுத்தி உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே ஆடும் 11 வீரர்கள் அணிப் பட்டியலில் இடம் பிடித்த அஸ்வின் தனது அபார பந்துவீச்சால் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணியின் ரன் வேட்டையைக் கட்டுக்குள் வைக்க அஸ்வினின் பந்துவீச்சும் உதவியது என்றே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் ஆன மார்டின் குப்டில் எடுத்ததும் அஸ்வினின் பந்தை சந்தித்தார். அஸ்வினுக்கு எதிரில் நின்று விளையாடுவது ஒரு பேட்ஸ்மேனுக்கு எவ்வளவு கஷ்டம் என்று தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார் மார்டின். மேலும் அவர் கூறுகையில், “அஸ்வின் மிகவும் தந்திரமான ஒரு பந்துவீச்சாளர். கோட்டின் எல்லை, ஓடி வரும் நீளம் என அனைத்துமே அவரது கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கும்.

முக்கியமாக, அஸ்வின் மோசமான பந்துகளை வீசமாட்டார். என் ஞாபகத்தின் அடிப்படையில் சொல்கிறேன், தன்னுடைய கிரிக்கெட் வாழ்நாளிலேயே அஸ்வின் ஒரு மோசமான பந்தை கூட வீசி இருக்கமாட்டார். அவரைக் கடந்து விளையாடுவது எல்லாம் ரொம்ப கஷ்டம். அவரது பந்துவீச்சு அவரது கட்டுப்பாட்டில் அவர் எப்படி வீச நினைக்கிறாரோ அப்படியே வந்து விழும். அவரை அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடியாது” எனக் கூறியுள்ளார்.

அஸ்வின் மீண்டும் அணியில் இணைந்ததில் இருந்து இதுவரையில் 4 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த 4 போட்டிகளிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். விளையாடிய 4 போட்டிகளிலுமே போட்டிக்கு தலா 4 ஓவர்கள் என தனக்கான முழு கோட்டாவையும் பயன்படுத்தி உள்ளார். அணியின் கேப்டனும் பயிற்சியாளர்களும் அஸ்வின் மேல் எந்தளவும் நம்பிக்கை வைத்திருந்தால் அவருக்கான முழு ஓவர்களையும் கடந்த 4 போட்டிகளிலும் கொடுத்திருப்பார்கள் என்பது நமக்கு இதன் மூலமாகத் தெளிவாகி உள்ளது.

பந்துவீச்சிலேயே தனக்கான ஸ்டைலை நிலைநாட்டியவர் அஸ்வின் தான். டி20 போட்டிகளில் இவர் அறிமுகப்படுத்திய ‘கேரம் பால்’ பெரிய ஹிட். தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடி தன்னுடைய திறமையை மேம்படுத்திக் கொள்ளவும் அஸ்வின் தவறவில்லை என்றே தெரிகிறது.

CRICKET, RASHWIN, T20I, INDVSNZ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்