இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் யார்??.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் யார் என்பது பற்றி, தற்போது அதிகாரபூர்வமான தகவல் வெளி வந்துள்ளது.

Advertising
>
Advertising

கடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன், அதன் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகியிருந்தார்.

திடீரென கோலி வெளியிட்ட அறிவிப்பால், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. தொடர்ந்து, இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாகும் வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது பற்றி, பலரும் பல விதமான கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.

டெஸ்ட் கேப்டன்

ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட பல வீரர்களின் பெயரையும் கிரிக்கெட் நிபுணர்கள் கணித்து வந்தனர். இதனிடையே, கோலிக்கு பிறகு, இந்திய அணியின் ஒரு நாள் மற்றும் டி 20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டிருந்தார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி 20 தொடரிலும், இந்திய அணியை ரோஹித் ஷர்மா தான் வழிநடத்தி வருகிறார்.

அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்நிலையில், நீண்ட நாள் ரசிகர்கள் காத்திருந்த கேள்விக்கான விடை கிடைத்துள்ளது. இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் யார் என்பதை பற்றி, தற்போது தெரிய வந்துள்ளது. இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி 20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும், இந்திய அணியை ரோஹித் ஷர்மா தான் வழிநடத்தவுள்ளார். மேலும், துணை கேப்டனாக, வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

புஜாரா - ரஹானே

இது போக, சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா ஆகியோருக்கு டெஸ்ட் அணியில் இடம் வழங்கப்படவில்லை. ஜடேஜா மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ள நிலையில், கோலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்கு இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

VIRAT KOHLI, ROHIT SHARMA, BUMRAH, IND VS SL, TEST CAPTAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்