‘ஐ.பி.எல் கண்டிப்பா நடக்கும்...’ ஆனால், ‘அதுக்கெல்லாம்’ அங்க பெர்மிஷன் கெடையாது...! ஐ.பி.எல் தொடர்பான வதந்திகள் குறித்து புதிய தகவல்கள்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடக்கவிருக்கும் சூழலில் கொரொனோ வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகளுக்கு தடை விதிக்கக் கூடும் என்னும் வதந்திகள் பரவி ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பதட்டமடைய செய்து வருகிறது, மேலும் இவ்வைரசிலிருந்து தப்பித்த நாடு ஏதும் இல்லை என்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. நிபா வைரசை காட்டிலும் மிக அதிக வீரியத்தை கொண்டுள்ளது என பல மருத்துவ அறிஞர்கள் கூறி வரும் சூழலில் இன்றளவும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
கொரொனோ வைரஸ் காரணமாக பல நாடுகளில் விளையாட்டு போட்டிகளும் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து லீக் ஆட்டங்கள் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடைபெற்று வருகின்றன. சில போட்டிகள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.
தற்போது இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகளுக்கான பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை இந்தியாவில் 45 பேர் கொரொனோ வைரசால் பாதிப்படைந்துள்ள நிலையில் ஐ.பி.எல் போட்டிகள் தள்ளிபோகுமா இல்லை, தடை செய்யப்படுமா என்று ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை நிருபிக்கும் வகையில் சமுகவளைதளங்களில் சிலர் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாது எனவும், இல்லையென்றால் ரசிகர்கள் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் போட்டி நடத்தப்படலாம் என வதந்திகளை பரவி வருகிறது.
அதற்கு பதிலளிக்கும் வகையில் போட்டிகள் கட்டாயம் நடைபெறும் என பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். எஃப்சி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் ஏடிகே-பெங்களூரு எஃப்சி அணிகள் மோதிய ஆட்டத்தில் ரசிகர்களின் வருகையை யாராலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. கிட்டதட்ட 60 ஆயிரம் ரசிகர்கள் மைதானம் வந்து போட்டியை ரசித்தனர். எனவே இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது. ஆனால் ரசிகர்களுக்கு கிரிக்கெட் வீரர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வது போன்றவற்றிற்கு தடைகள் விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் பரவி வரும் கொரொனோ வைரசை கட்டுப்படுத்த கண் மற்றும் வாய் பகுதிக்கு கைகளை கொண்டு செல்வதை தவிர்க்கவேண்டும் என்றும், அடிக்கடி கைக்கழுவுமாறும், வெளியே செல்லும் போது முக கவசம் அணிந்து கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறித்திவருகின்றனர் மேலும் மக்கள் பொது இடங்களில் கூட்டமாக இருப்பதை தவிக்க வேண்டும் என்று சுகாதார துறை மக்களுக்கு அறிவுறித்தி வருகிறது. கூட்டம் மிகுந்த பகுதிகளில் இந்த வைரஸ் பரவ அதிக வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வாவ்... செம ஐடியா...!' 'கொரோனாகிட்ட இருந்து எஸ்கேப் ஆகணுமா...?' அப்படின்னா 'இதுதான்' ஒரே வழி... வைரலாகும் அல்டிமேட் வீடியோ...!
- 'டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் 2 பேர் உயிரிழப்பு...' '6 தமிழர்கள் உட்பட 138 இந்தியர்கள்...' 624 பயணிகளுக்கு கொரோனா வைரஸ்... !
- பணத்துக்கே ‘திமிரு’ காட்டிய கொரோனா வைரஸ்...! ‘கரன்சியையும் விட்டு வைக்காத கொடூரம்...’அதிக வெப்பத்தில் எரிக்க உத்தரவு...!
- எப்படிடா 'இது' அங்க இருந்து சென்னைக்கு வந்துச்சு...! ‘ப்ளீஸ் எப்படியாச்சும் திருப்பி அனுப்பிடுங்க...’ 'அதுக்கு கொரோனா வைரஸ் இருக்கா..? இல்லையா...?' அதிர்ச்சி சம்பவம்...!
- பசிக்குதா..? 'பதில் சொல்ல இயலாமல் கலங்கும் காதல் மனைவி...' 'ஆசையாக ஊட்டியபின் அகமகிழும் கணவன்...' உள்ளத்தை உருக செய்யும் 'காதல்' காணொளி...!
- 'ரிமோட்' காருக்குள்ள எல்லாம் செட் பண்ணி வச்சாச்சு...! அது எப்படி கடைக்குப் போய் சாமான்களை வாங்கிட்டு வருது தெரியுமா...? 'ட்ரெண்டிங்' ஆகும் வீடியோ...!
- 'அய்யயோ..! எல்லாரும் ஓடுங்க, கொரோனா வைரஸ் வருது...!' ஹாயா ஜம்முன்னு உட்கார்ந்திட்டு இருக்கீங்களா, இப்ப பாருங்க...! பயணிகளை 'தெறிக்க' விட்ட நபருக்கு என்ன தண்டனை தெரியுமா...?
- 'அவங்களும் லீவ் இல்லாம வொர்க் பண்ணிட்டே இருக்காங்க, அதனாலதான்...' 'நர்ஸ் மாதிரி தான் நல்லாவே பார்த்துக்குறாங்க...!' கொரோனா தொற்று ஏற்படுவதால் நர்ஸ் ரோபோக்கள்...!
- 'ஆரம்பத்துல சொன்னதுக்காக புடிச்சு ஜெயில்ல போட்ருக்காங்க...' 'கொரோனாவ' முதல்ல கணிச்சவரே இவரு தான்...., இப்போ அவரோட நிலைமை என்ன தெரியுமா ...?
- நானும் 'அவர' கூட்டிட்டு சீனா போகப் போறேன்...! ‘சொந்தக்காரங்க யாருமே என் கல்யாணத்துக்கு வரல...’ கொரோனா போச்சுன்னா ‘குடும்பத்தோட’ இன்னொரு கல்யாணம்...!