20 அணிகள்.. 4 க்ரூப்.. அடேங்கப்பா அடுத்த T20 உலகக்கோப்பை வேற லெவல்ல இருக்கும் போலயே.. வெளியான தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அடுத்த T20 உலகக்கோப்பை தொடர் புதிய வடிவில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertising
>
Advertising

அண்மையில் ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பை டி20 தொடர் நடைபெற்றது. இதில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில், அடுத்த உலகக்கோப்பை தொடர் வரும் 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் வழக்கத்தை விட வித்தியாசமான முறையில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கும் எனவும், மொத்தமாக 55 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. ஏற்கனவே, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிகா, நெதர்லாந்து அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மேலும் ஐசிசி தரவரிசை அடிப்படையில் இரண்டு (வங்காளதேசம், ஆப்கானிஸ்தான்) அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க அணிகள் தொடரை நடத்துவதால் நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

உலகக்கோப்பை தொடருக்கு நடத்தப்படும் தகுதிச் சுற்றின் அடிப்படையில் மீதமுள்ள 8 அணிகள் தேர்ந்தெடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதில், ஆப்பிரிக்க தகுதி சுற்றில் இருந்து 2 அணிகளும், அமெரிக்க தகுதி சுற்றில் 1 அணி, ஆசிய தகுதி சுற்றில் 2 அணிகள், கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதி சுற்றில் 1 அணி, ஐரோப்பிய தகுதி சுற்றில் 2 அணிகள் என மொத்தம் 20 அணிகள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த 20 அணிகளும் 4 குழுக்களாக பிரிக்கப்படும் எனவும், ஒரு குழுவில் உள்ள அணிகள் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோத வேண்டும் எனவும் தெரிகிறது. இதன்பிறகு ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழையும். இதில் 2 குழுக்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூப்பர் 8 சுற்றில் உள்ள இரண்டு குழுக்களில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். பின்னர் அவற்றுள் இருந்து இறுதிப்போட்டிக்கு இரண்டு அணிகள் தகுதி பெறும் எனவும் சொல்லப்படுகிறது.

ICC, T20, WORLDCUP

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்