‘கோலியை’ கோபப்படுத்திய... ஜடேஜாவின் ‘சர்ச்சை’ ரன் அவுட்டில் புது ‘ட்விஸ்ட்’...

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் ஜடேஜாவின் சர்ச்சை ரன் அவுட் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ஞாயிறன்று சென்னையில் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியா படுதோல்வியடைந்தது. மேலும் அந்தப் போட்டியில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவின் ரன் அவுட்டும் சர்ச்சைக்குள்ளானது. ஜடேஜாவின் ரன் அவுட்டை முதலில் நாட் அவுட் எனக் கூறிய களநடுவர் பிறகு ரீப்ளேயைப் பார்த்து 3வது நடுவரிடம் தீர்ப்பு குறித்து ஆலோசித்தார் எனக் குற்றச்சாட்டு எழுந்தது. இதை வெளிப்படையாக விமர்சித்திருந்த கோலி பேட்டியின்போதும் இதுகுறித்து புகார் தெரிவித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் ஜடேஜாவின் ரன் அவுட்டிற்கு எதிரான கோலியின் கோபம் நியாயமற்றது எனவும், ரன் அவுட் முறையீடு சரியானதே எனவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில் போட்டியின்போது களநடுவர் ரீப்ளேயைப் பார்த்து 3வது நடுவரை அழைக்கவில்லை. மாறாக 3வது நடுவர் ரீப்ளேக்களை பார்த்த பிறகு களநடுவருக்கு ரெஃபர் செய்யுமாறு ரேடியோ மூலம் கேட்டுக்கொண்டதை அடுத்தே அவுட் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அதில், களநடுவர் இருந்த இடத்திலிருந்து பார்க்கும்போது ஜடேஜா கிரீசைத் தாண்டியது போலத் தெரிந்திருக்கலாம். ஆனால் அவர் பந்து ஸ்டம்பை அடிக்கும்போது கிரீசைத் தாண்டி ரீச் செய்யவில்லை என 3வது நடுவரே களநடுவருக்கு அறிவுறுத்தியுள்ளார். இதையே வெளியில் இருந்தவர்கள் கூறியதைக் கேட்டு மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ரிவ்யூ வேண்டுமென களநடுவரை வற்புறுத்தியதாக விராட் கோலி தவறாகப் புரிந்துகொண்டுள்ளார். அத்தோடு அடுத்த பந்து வீசும் வரை அணிகள் அப்பீல் செய்யவும் விதியில் இடமுண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

CRICKET, VIRATKOHLI, INDVSWI, RAVINDRAJADEJA, RUNOUT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்