IPL2023: ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையா.? அம்பயர்களின் முடிவால் அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்.. அஸ்வின் பேசியது என்ன?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் இடையேயான போட்டி சென்னையில் நடந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஆடிய ஜோஸ் பட்லர் அரைசதம் 52 ரன்கள் அடித்து அரைசதம் விளாசினார். தவிர தேவ்தத் படிக்கல்(38), அஷ்வின் (30), ஹெட்மயர்(30) ஆகியோர் அடித்த ரன்களும் சேர்த்து மொத்தம் 20 ஓவரில் 175 ரன்கள் அடித்தது சிஎஸ்கே.
அதன் பிறகு 176 ரன்கள் என்ற இலக்கை சிஎஸ்கே அணி விரட்டியதில், தோனி மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் கடைசியில் சிக்ஸர் விளாசினர். எனினும் 20 ஓவர் முடிவில் 172 ரன்கள் அடித்து 3 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி தோல்வியுற்றது. தோனிக்கு இது 200வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீசியது. அப்போது, பனிப்பொழிவு இருந்ததால், பந்து வழுக்கியது. இதனால் அம்பயர்கள் பவுலிங் அணிக்கு வேறு பந்தை வழங்கினர். இப்படி, பனி என்பது இந்த ஆட்டத்தின் ஒரு அங்கமாகவும், வியூகமாகவும் மாறியது. 2வது இன்னிங்ஸில் பனி தாக்கம் பவுலர்களுக்கு சிரமமாக இருந்தால், அது பேட்டிங்கிற்கு சாதகமாகிவிடும். இந்நிலையில் அம்பயர்கள் பந்தை மாற்றி வழங்கினர். இப்படி ஒரு விஷயம் ஐபிஎல் வரலாற்றில் நடந்ததே இல்லை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின், “அம்பயர்கள் பந்தை மாற்றி வழங்கியது வியப்பாக இருந்தது. இந்த சீசனிலும் இப்படி சில முடிவுகள் எனக்கு வியப்பாகவே அமைந்தன. இன்னிங்ஸின் இடையில் இப்படி பந்தை மாற்றி கொடுத்ததும் அதிர்ச்சி ஆனேன். இவ்வாறு செய்தது நல்லது, கெட்டது என்பதை தாண்டி, இரண்டு அணிகளுக்கும் இது சரியான பேலன்ஸாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "தோனியை முதல்தடவை பார்த்தப்போ.. இப்படித்தான் நெனச்சேன்".. சின்ன தல ரெய்னா சொன்ன விஷயம்.. உருகிய ரசிகர்கள்..!
- "இந்த வருஷம் தோனி ஓய்வு பெறுவாரா?".. ரோஹித் ஷர்மா கொடுத்த நச் பதில்..!
- "அவர்கிட்ட காசு இருக்காது.. பால் பாக்கெட் விற்பனை செஞ்சு தான்".. ரோஹித் ஷர்மா குறித்து உருக்கமாக பேசிய ஓஜா..!
- "புஷ்பா-ன்னா ஃபிளவருன்னு நெனச்சீங்களா".. ஜடேஜா செஞ்ச சம்பவம்.. வீடியோ..!
- ரிஷப் பண்ட் இந்த விஷயத்துல அவசரப்படக்கூடாது.. சவுரவ் கங்குலி கொடுத்த அட்வைஸ்..!
- "அந்த ஒரு இன்னிங்ஸ்".. இனிமே எனக்கு டீம் -ல வாய்ப்பில்லன்னு தெரிஞ்சு போச்சு.. நம்பிக்கை தகர்ந்தது பற்றி பேசிய தவான்!!
- விராட் கோலியை முதலில் பார்த்ததும் தப்பா புரிஞ்சுகிட்ட ஏபிடி.. பின்னர் தெரிய வந்த உண்மை.. சுவாரஸ்ய பின்னணி!!
- IPL 2023 : "இந்த தடவ நான் வரேன்". ஏலத்தில் போகாத போதும் ஸ்டீவ் ஸ்மித் சொன்ன விஷயம்.. கடைசி நேரத்தில் நடந்த ட்விஸ்ட்?
- "என்னா மனுஷன்யா".. பவுண்டரி லைன் அருகே நின்ன குழந்தை.. ரன் போனாலும் பரவாயில்லன்னு பிரபல வீரர் செஞ்ச விஷயம்!!.. வீடியோ!
- திருமண வாழ்க்கை.. "அதுல நான் தோத்துட்டேன், திரும்பவும் கல்யாணம் பண்ண நெனச்சா".. ஷிகர் தவான் ஷேரிங்ஸ்!!