“இந்திய அணியை குறைச்சு எடை போட்ரக் கூடாது! கத்துக்கிட்டோம்!”.. “வெறும் 11 பேர்னு நெனைச்சோம்.. ஆனா அவங்க அத்தனை கோடி இந்தியர்கள்!” - இவரே சொல்லிட்டாரா? ஆஸி மண்ணில் இப்படி ஒரு ‘கெத்தான’ பாராட்டு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் அந்த அணியுடன் மோதிய இந்திய அணி,  3வது டெஸ்ட் போட்டியை, ரிஷப் பந்த், அஸ்வின், ஹனுமான் விஹாரியின் உள்ளிட்ட இளம் வீரர்களை வைத்தே எதிர்கொண்டு ஒரு படி முன்னேறியது.

இந்த நிலையில் பிரிஸ்பன் மைதானத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்திய அணி,  3 விக்கெட் இழப்புக்கு டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணில்  32 ஆண்டுகளுக்குப் பின் காபா மைதானத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியதை அடுத்து இந்த வரலாற்று சாதனைக்காக இந்திய அணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசு அறிவித்து பிசிசிஐ தலைவர் கங்குலி அதிரடியாக அறிவித்து கவுரவப்படுத்தினார். ஆட்ட நாயகனாக ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார். டிம் பெய்ன், வார்னர், ஸ்மித் போன்ற காட்டடி வீரர்கள் இருந்தும் இந்திய அணியின் இளம் வீரர்கள் ஆஸ்திரேலிய அணியை அடித்து பறக்க விட்டுவிட்டு, ஆஸி மண்ணில் இந்திய கொடியை பறக்க விட்டு, கெத்தாக வந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், ஒருபோதும் இந்திய வீரர்களை குறைத்து மதிப்பீடு செய்துவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் இப்படி குறிப்பிட்டுள்ளார். அதில், 11 வீரர்களுடன் தான் நாங்கள் ஆடினோம் என நினைத்தோம். ஆனால் இந்தியாவில் இருக்கும் அத்தனை கோடி மக்களும் இவர்களுடன் உள்ளனர். எனவே இந்தத் தொடரின் மூலம் நிறையவே  கற்றுக்கொண்டோம். இந்த டெஸ்ட் தொடரில் முடிவில் வெற்றியாளர் அல்லது தோற்பவர் என யாராவது ஒருவர் இருந்தாக வேண்டும்.

 

ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்தான் வென்றது. இந்த வெற்றிக்கு முழுமையானவர்கள் இந்தியர்கள் மட்டும்தான். நீண்ட காலத்துக்கு இந்த தோல்வி எங்களை பாதிக்கும்.  எதையுமே நாம் குறைத்து மதிப்பீடு செய்துவிடக் கூடாது. அதிலும் இந்தியர்களை ஒருபோதும், அதாவது எப்போதுமே குறைத்து எடை போட்டுவிடக் கூடாது. இந்த வீரர்கள் அத்தனை கடினமான சவால்களை அளிக்கிறார்கள் என்பது நியாபகத்தில் இருக்க வேண்டும். அதே சமயம், முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களில் சுருட்டி, 3 நாட்களில் நாங்கள் வென்றோம். இதனால் இந்திய அணிக்கு முழுமையான வெற்றியை வழங்கிவிட மாட்டேன்.

ALSO READ: ‘ஸ்மித், வார்னர், டிம் பெய்ன் இருந்தும்.. டெஸ்ட் மேட்சையே ஒன் டே மேட்சா மாத்திட்டீயே பங்கு!’.. மிரட்டிய ரிஷப் பந்த்.. சந்தோஷத்தில் கங்குலியின் ‘அதிரடி’ அறிவிப்பு!

மிகச் சிறப்பான நம்ப முடியாதை ஆட்டத்தை ஆடிய ரிஷப் பந்த், ஹெடிங்கிலியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை நினைவு படுத்தினார். எந்தவிதமான பயமின்றி, ரிஷப் பந்த் சிறப்பாக பேட் செய்தார்” என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்