ச்ச.. இந்த மனுசனுக்காகவாது மேட்ச் ஜெயிச்சிருக்கலாம்.. கடைசி ஓவரில் சஹால் பண்ண ‘பெரிய’ தப்பு.. விட்டு விளாசும் நெட்டிசன்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீபக் சஹாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Advertising
>
Advertising

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் நடந்து முடிந்த 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியாவை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை தக்க வைத்துக் கொண்டது.

இந்த நிலையில் நேற்று இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் கேப்டவுன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் நடப்பு கேப்டன் கே.எல்.ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாக டி காக் 124 ரன்களும், வான் டெர் டஸ்ஸன் 52 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் தீபக் சஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், சஹால் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். இதில் கே.எல்.ராகுல் 9 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனை அடுத்து களமிறங்கிய விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்த ஷிகர் தவான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியை நீண்ட நேரமாக தென் ஆப்பிரிக்க அணியை பிரிக்க முடியவில்லை. இதில் விராட் கோலி 65 ரன்களும், ஷிகர் தவான் 62 ரன்களும் எடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த், தான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 26 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மிடில் ஆர்டர் வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், போட்டி இந்திய அணியின் கையைவிட்டு நழுவி சென்றது.

இந்த இக்கட்டான சமயத்தில் களமிறங்கிய தீபக் சஹார், தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 2 சிக்சர், 5 பவுண்டரிகள் விளாசி அரைசதத்தை (54 ரன்கள்) பதிவு செய்தார். அதனால் இந்திய அணி வெற்றி பெற மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

அப்போது தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடி வீசிய 48-வது ஓவரில் தீபக் சஹார் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து பும்ராவும் 12 ரன்களில் வெளியேறினார். அதனால் 281 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இந்தியா இழந்தது. இதனை அடுத்து சஹால் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஜோடி சேர்ந்தனர். கடைசி ஓவரில் 6 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்திய அணி வென்றது.

அதில் கடைசி ஓவரின் முதல் பந்தில் பிரசித் கிருஷ்ணா சிங்கிள் எடுத்தார். இதனை அடுத்து 2-வது பந்தை எதிர்கொண்ட சஹால், பந்தை தூக்கி அடிக்க முயன்று டேவிட் மில்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி த்ரில் வெற்றி பெற்றது. 5 பந்துக்கு 5 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், ஒவ்வொரு பந்துக்கும் சிங்கிள் அடித்தாவது மேட்சை டிரா ஏதாவது செய்திருக்கலாம். ஆனால் அணி இக்கட்டான சூழலில் இருந்தபோது இதுபோன்ற தேவையில்லாத ஷாட்களை தவிர்த்திருக்கலாம் என ரசிகர்கள் சஹாலை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

வெற்றி பெறவேண்டிய போட்டியை இந்தியா தவற விட்டதால் கேளரியில் அமர்ந்திருந்த தீபக் சஹார் கணகலங்கி விட்டார். கடைசி நேரத்தில் களமிறங்கி தனது அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்காவுக்கு தீபக் சஹார் பயத்தை காட்டியதாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

திடீரென கே.எல்.ராகுலை கூப்பிட்டு ‘அட்வைஸ்’ பண்ண கோலி.. அப்படின்னா பாகிஸ்தான் வீரர் சொன்னது உண்மையா..?

தன்னோட இடம் பறிபோயிடும்னு ருத்ராஜ் மேல K L ராகுலுக்கு பயம்... டிவிட்டரில் வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

TEARFUL DEEPAK CHAHAR, SOUTH AFRICA, 3RD ODI, இந்திய அணி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்