“இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்...?” - புதிய சாதனை படைத்த நடராஜன்... VIDEO வெளியிட்டு புளங்காகிதம் அடைந்த BCCI - நெகிழ்ச்சியில் நெட்டிசன்ஸ்...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இடம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற நடராஜன் கிரிக்கெட் உலகில் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளார். இவர் வலைப்பயிற்சியில் பந்துவீசச் சென்று ஒரே சுற்றுப்பயணத்தில் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகியிருக்கிற முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை தற்போது பெற்றிருக்கிறார். இது தமிழகத்திற்கு மட்டும் அல்லாமல் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கக் கூடிய விஷயமாக இருக்கிறது என்று நெட்டிசன்கள் நிகழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

இன்று காலை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் துவங்கியது. இதில் இந்திய வீரர்கள் பலரும் காயம் அடைந்ததால் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அதன்படி தமிழக வீரர்கள் தங்கராசு நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு முதல்முறையாக டெஸ்ட் அணியில் ஆடக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதனால் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக களமிறங்கும் 300 ஆவது வீரராக வரலாற்றில் இடம் பிடித்திருக்கிறார் நடராஜன்.

ALSO READ: "ஸ்கேனை உத்து பாத்தப்போ இவர் முகம் தான் தெரியுது!".. கர்ப்பிணி பெண் ‘குறிப்பிட்ட’ அந்த ‘அகில உலக’ பிரபலம் யார் தெரியுமா?

அதற்கான தனது தொப்பியை அவர் பெற்றுள்ளார். இதேபோல் 301 ஆவது வீரராக வாஷிங்டன் சுந்தர் இடம் பிடித்திருக்கிறார். அவரும் அதற்கான தொப்பியை பெற்றார். பிசிசிஐ இதை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்து இருக்கிறது.

இதனால் ரசிகர்களும் இந்தியர்களும் குறிப்பாக தமிழர்களும் நெகழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்