வேகமாக ரன் ஓடிய பேட்ஸ்மேன்.. எதிர்பாராமல் நடந்த 'சம்பவம்'.. "ஆனாலும், இந்த கீப்பரோட மனசு இருக்கே.." மெய் சிலிர்க்க வைத்த வீரர்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

'கிரிக்கெட் என்பது ஜென்டில் மேன் விளையாட்டு' என்று ஒரு சொல் உண்டு. அந்த வாக்கியத்தினை மெய்ப்பிக்கும் வகையில், பல நிகழ்வுகள் கிரிக்கெட் போட்டிகளில், அடிக்கடி நிகழ்வதை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

Advertising
>
Advertising

"பிரச்சனையே உங்களால தான்.. நீங்க வாய மூடுனா மட்டும் போதும்".. கோலி விவகாரத்தில் பொறுமை இழந்த ரோஹித் ஷர்மா

சில வீரர்கள் அவுட்டான பிறகு, போட்டி நடுவர் அவுட் என அறிவிப்பதற்கு முன்னரே, பேட்ஸ்மேன்கள் நேர்மையுடன் வெளியேறிச் செல்லும் செயல், அதிகம் நடந்ததுண்டு.

Spirit of Cricket

அதே போல, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில், சிறப்பாக செயலபட்டதற்கு, 'Spirit of Cricket' என்ற விருதும் வழங்கப்பட்டிருந்தது. அந்த போட்டியில், இங்கிலாந்து வீரர் இயான் பெல் சர்ச்சைக்குரிய முறையில் ரன் அவுட்டாகியிருந்தார். ஆனால், தோனியோ அவரை மீண்டும் பேட்டிங் செய்யும் படி அழைத்தார்.

தோனியின் இந்த செயல், அதிகம் வரவேற்பினை பெற்றிருந்தது. ஐசிசியும் அவரது நேர்மைமிக்க செயலுக்கு விருது வழங்கி கவுரவித்தது. அந்த வகையில், ஏறக்குறைய அதே போல ஒரு சம்பவம் தற்போது மீண்டும் நடந்துள்ளது.

ஆசிப் ஷேக்

ஓமனில் நடைபெறும் டி 20 போட்டி தொடர் ஒன்றில், அயர்லாந்து மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் மோதியுள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, 19 ஆவது ஓவரில் 114 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. அப்போது, கமல் சிங் வீசிய பந்தில், அயர்லாந்து பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க ஓடினர்.

நியாயமான செயல்

அந்த சமயத்தில், நான் ஸ்ட்ரைக் பகுதியில் நின்ற Andy McBrine, பேட்டிங் பகுதிக்கு ரன் ஓடிச் சென்ற போது, எதிர்ப்பாராத விதமாக, தடுமாறி கீழே விழுந்தார். அவர் கிரீஸுக்குள் செல்வதற்கு முன்பாக, பந்து விக்கெட் கீப்பர் கைக்குச் சென்று விட்டது. அவுட்டாக்க சிறந்த வாய்ப்பு இருந்தும், பேட்ஸ்மேன் தவறி விழுந்த காரணத்தினால், அந்த வீரரை ரன் அவுட் செய்யாமல், கீப்பர் ஆசிப் ஷேக் மறுத்து விட்டார்.

வியப்பில் ரசிகர்கள்

எதிரணி வீரரை அவுட் செய்ய வாய்ப்பு இருந்தும், பேட்ஸ்மேன் தவறி விழுந்ததால், அவரை அவுட் செய்வது சரியாக இருக்காது என ஆசிப் ஷேக் அவரை அவுட் செய்ய மறுத்து விட்டார். அவரின் இந்த நியாயமான செயல், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போட்டியில், நேபாளம் அணி, தோல்வியை தழுவியிருந்தது. ஒரு வேலை, ஆசிப் எதிரணி பேட்ஸ்மேனை அவுட் செய்திருந்தால், போட்டி நேபாள அணி பக்கம் கூட திரும்பியிருக்கலாம். ஆனால், ஆசிப்பின் நேர்மையான செயல், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஏலம் முடிஞ்சதும்.. 'கோலி' அனுப்பிய 'மெசேஜ்'.. சீக்ரெட் பகிர்ந்த 'டு பிளஸ்ஸிஸ்'!!

NEPAL WICKET KEEPER, AASIF SHEIKH, SPIRIT OF CRICKET, கிரிக்கெட், ஆசிப் ஷேக்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்