'ஜாம்பவான்களின் சாதனைகளை தூக்கி சாப்பிட்ட வீரர்'... 'ரன் சேஸிங்கில் புதிய உலக சாதனை'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநேபாள வீரரும், கேப்டனுமான பராஸ் ஹட்கா, சர்வதேச டி20 போட்டியில், விராட் கோலி, கிறிஸ் கெயில், ஸ்டீவ் ஸ்மித் போன்ற வீரர்களை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
ஜிம்பாப்வே, நேபாளம், சிங்கப்பூர் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் சிங்கப்பூரில் நடைப்பெற்று வருகிறது. இந்தத் தொடரின், 2-வது போட்டியில், சிங்கப்பூர் , நேபாளம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சிங்கப்பூர் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய நேபாள அணி 16 ஓவரில், 154 ரன்கள் எடுத்து, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்தப் போட்டியில் நேபாள அணியின் கேப்டனான பராஸ் ஹட்கா, 52 பந்தில், 9 சிக்சர்கள், 7 பவுண்டரிகள் என 106 ரன்கள் அடித்து, கடைசிவரை அவுட்டாகாமல் இருந்து அணியை வெற்றிப் பெறச் செய்தார்.
இதன்மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். டி20 சர்வதேச அரங்கில் சதம் அடித்த முதல் நேபாள வீரர் என்ற வரலாறு படைத்தார். இதைத்தவிர, டி20 வரலாற்றில் சேஸிங்கின் போது சதம் அடித்த முதல் கேப்டன் என்ற புதிய உலக சாதனை படைத்தார் பராஸ் ஹட்கா. மேலும், அதிகரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் பராஸ் ஹட்கா முதலிடம் பிடித்தார். முன்னதாக நெதர்லாந்தின் பீட்டர் (96) இந்த சாதனை படைத்திருந்தார். இப் பட்டியலில் அடுத்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் (90), கிறிஸ் கெயில் (88) ஆகியோர் அடுத்தடுத்த வரிசையில் உள்ளனர். இந்திய கேப்டன் விராட் கோலி (82) 8-வது இடத்தில் உள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்'...'ஆற்றில் கவிழ்ந்த பேருந்து'... கதறி துடித்த பயணிகள்!
- போதை மருந்து பயன்படுத்திய விவகாரம் பிரபல கிரிக்கெட் வீரர் விளையாட தடை..! உலகக் கோப்பை வாய்ப்பு பறிபோகுமா?
- திடீரென உயிரிழந்த கிரிக்கெட் ஆல் ரவுண்டர்..! சோகத்தில் கிரிக்கெட் உலகம்..!
- 'எப்ப பாரு குத்துடா,கொல்லுடாண்ணு இருக்கான்'...'கொந்தளித்த பெற்றோர்'...வந்தது அதிரடி தடை!
- சுழன்றடித்த பேய்மழை.... 27 பேர் உயிரிழப்பு... 400 பேர் படுகாயம்...
- 'போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்து'.. பிரபல கிரிக்கெட் வீரர் கைது!
- புற்று நோயால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..!