'கே.எல்.ராகுல் ரொம்ப கன்ஃபியூஸ் ஆகுரார்னு தோணுது...' 'அந்த விசயத்துல' மட்டும் ரொம்ப தப்பு பண்ணிட்டாரு...! - விளாசி தள்ளிய ஆஷிஸ் நெஹ்ரா...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பல ஆண்டுகளாக பஞ்சாப் அணி செய்து வரும் தவறு இந்த சீசனிலும் எதிரொலிக்கிறது.

2021ஆண்டின் ஐபில் 14ஆம் சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ஐ.பி.எல். தொடரில் நடந்த எந்த சீசனிலும் கோப்பை பெறாத ஒரே அணி பஞ்சாப் அணியாகும்.

இந்த தொடரிலும் பஞ்சாப் அணி பேடிங்கில் பிரமாதமாக இருந்தாலும், பௌலிங் மற்றும் பீல்ட்டிங்கை பொறுத்தவரை முன்பு போலவே இருப்பதாக இருக்கிறது.

பஞ்சாப் அணியின் கேப்டனான ராகுல் பேட்டிங்கில் கவனம் செலுத்தும் அளவிற்கு பௌலிங் மற்றும் பீல்ட்டிங்கிளும் கவனம் செலுத்த வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதோடு தற்போது இந்திய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ராவும் பஞ்சாப் அணிக்குறித்து கூறியுள்ளார்.

அதில், 'டி -20 போட்டியைப் பொறுத்தவரை அணியில் இருக்கும் ஒவ்வொரு வீரரும் நன்றாக பேட்டிங் செய்ய வேண்டும், பவுலிங் மற்றும் பீல்டிங் செய்ய வேண்டும் என்று தான் விரும்புவார்கள்  ஆனால் நாம் விரும்பும் படி எல்லா நாளும் இருக்கபோவது இல்லை.

ஆனால் சில விஷயங்கள் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும். நம் கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களில் நாம் செய்யும் தவறை கவனிக்க வேண்டும். அதைக் கூட சரியாகச் செய்யாவிட்டால் எப்படி.

பஞ்சாப் அணியில் அணிக்காக அதிக பணம் கொடுத்து ஏலத்தில் வாங்கப்பட்ட பவுலர்கள் தொடக்க ஓவரில் ஆடுவதில்லை. ஏன் துவக்க ஓவர்களை வீசச் சொல்லுவதில்லை. பந்து வீச்சில் கில்லாடியான மெரிடித் 10 வது ஓவருக்குப் பின் தான் பந்து வீச வந்தார், முதல் ஓவரில் ஸ்மித்தை அவுட்டாக்கினார்.

முகமது ஷமி நான்கு ஓவர்களையும் வெவ்வேறு நேரத்தில் வீசுகிறார். ஷமியுடன் இணைந்து அர்ஷ்தீப் சிங்கை துவக்க ஓவர் வீச செய்யச் சொன்னால், பிறகு போட்டியை எப்படி கட்டுப்படுத்துவீர்கள்.

இதைமட்டும் நாம் எடுத்துக்கொண்டால் ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியினர், பவுலிங் திட்டத்தை எப்படி செயல்படுத்துவது எனத் தெரியாமல் குழம்பியுள்ளனர்.

பவுலிங் திறமை இல்லாத அணிகள்,  முதல் நான்கு ஓவர்களையும் நான்கு பவுலர்கள் வீச செய்யும். அதை தான் பஞ்சாப் அணியும் செய்கிறது. என்னைப் பொறுத்தவரையில் பஞ்சாப் அணி செய்த மிகப்பெரிய தவறு இது தான் என்று நினைக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

மேலும் பஞ்சாப் அணி முதல் போட்டியில் 221/6 ரன்களை அதிரடியாக எடுத்தது. இந்த கஷ்டமான ரன்களையும் மோசமான பீல்டடிங்கால், 4 ரன் வித்தியாசத்தில் தான் வென்றது. மூன்றாவது போட்டியில் 195/4 ரன்கள் எடுத்திருந்தாலும் 6 விக்கெட்டில் வீழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்