ட்வீட் பண்ணது யூரோ கால்பந்து பத்தி.. ஆனா கலாய்ச்சது ஐசிசி ரூல்ஸை.. கிடைச்ச கேப்பில் வச்சு செஞ்ச நீஷம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

யூரோ கால்பந்து கோப்பையை சுட்டிக்காட்டி நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம், ஐசிசி விதியை விமர்சனம் செய்துள்ளார்.

யூரோ கால்பந்து இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி ஆகிய அணிகள் மோதின. இதில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் கோல் அடித்து சமநிலையில் இருந்தன. இதனால் நடைபெற்ற பெனால்டி ஷூட் முறையில் இங்கிலாந்தை வீழ்த்தி இத்தாலி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம், ‘வெற்றியாளரை யார் என முடிவு செய்ய ஏன் பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது? எந்த அணி அதிக முறை பந்தை பாஸ் செய்ததோ அந்த அணியே வெற்றி பெற்றதாக அறிவித்திருக்கலாமே?’ என மறைமுகமாக ஐசிசி விதிகளை சாடினார்.

அதாவது, கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்தும், நியூஸிலாந்தும் மோதின. அப்போது போட்டி சமனில் முடிந்தது. இதனை அடுத்து நடந்த சூப்பர் ஓவரிலும் போட்டி ‘டை’ ஆனது.

அதனால், ஐசிசி விதிகளின்படி அதிக பவுண்டரிகள் அடித்த இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இது அப்போது ரசிகர்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதனை விமர்சித்துதான் தற்போது நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் நியூஸிலாந்து அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்காரிஸும், யூரோ கால்பந்து இறுதிப்போட்டி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ‘யூரோ இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்குதான் அதிக கார்னர்கள் கிடைத்தன. அதனால் அவர்கள்தான் சாம்பியன்’ என ஸ்காட் ஸ்காரிஸ் பதிவிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்