உலகக்கோப்பையை தட்டி தூக்கிய இந்திய மகளிர் அணி.. ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா கொடுத்த மரியாதை.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீராங்கனைகளுக்கு இந்தியாவின் ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | "இவரு எங்க அப்பா.. ஆனா அவருக்கு அது தெரியாது".. மறதி நோயால் பாதிக்கப்பட்ட நபர்.. கண்கலங்க செய்யும் வீடியோ..!

இந்த ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. இதில் அரையிறுதி சுற்றுக்கு நியூசிலாந்து, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் முன்னேறி இருந்தது. இதிலிருந்து இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேற்றம் அடைந்திருந்தன.

Images are subject to © copyright to their respective owners.

இந்த உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டியில் முதலில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்திருந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இங்கிலாந்து அணி. 17.1 ஓவர்களில் வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இந்திய அணி சார்பில் டைடாஸ் சாது, அர்ச்சனா தேவி, பர்ஷவி சோப்ரா உள்ளிட்டோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.

Images are subject to © copyright to their respective owners.

தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய மகளிர் அணி, மூன்று விக்கெட்டுகளை இழந்து 14 ஓவரில் இலக்கை எட்டிப் பிடித்திருந்தது. இதன்மூலம் உலகக்கோப்பையையும் இந்திய அணி வென்றது. இந்த போட்டியை ஒலிம்பிக் சாம்பியனான நீரஜ் சோப்ரா நேரில் சென்று பார்த்திருக்கிறார்.

போட்டி முடிவடைந்ததும் மைதானத்திற்குள் இறங்கி சென்ற நீரஜ் சோப்ரா தனது தலையை தாழ்த்தி இந்திய மகளிர் அணியினருக்கு தனது மரியாதையை செலுத்தினார். இதனால் அங்கிருந்த வீராங்கனைகள் நெகிழ்ந்து போயினர். தொடர்ந்து அவர்களுடன் சோப்ரா கலந்துரையாடினார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Also Read | பளபளக்குது புதுநோட்டு.. ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக போனஸ்.. கைநிறைய கரன்ஸிகளுடன் சென்ற பணியாளர்கள்.. யாருப்பா நீங்க..?

CRICKET, NEERAJ CHOPRA, INDIAN WOMEN TEAM, INDIAN WOMEN TEAM U19 WC

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்