‘வெளிப்படையா சொல்லணும்னா, நாங்க அதை தவறவிட்டுட்டோம்’!.. தோல்விக்கு பின் சஞ்சு சாம்சன் சொன்ன பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் விளக்கம் கொடுத்துள்ளார்.

14-வது சீசன் ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், இளம் கேப்டன் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச தீர்மானம் செய்தது.

அதன்படி முதலில் ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்தது. ஆனால் ஆரம்பமே அந்த அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். இதனை அடுத்து மிடில் ஆர்டரில் களமிறங்கிய சிவம் தூபே (46 ரன்கள்) மற்றும் ராகுல் திவேட்டியா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை ராஜஸ்தான் அணி எடுத்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி, 181 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 101 ரன்களும், கேப்டன் விராட் கோலி 72 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி முதல் இடத்துக்கு முன்னேரியது.

இந்த நிலையில் போட்டி முடிந்தபின் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ‘உண்மையை சொல்ல வேண்டும் என்றால், பெங்களூரு அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. ஆனால் நாங்கள் இப்போட்டியில் சரியாக பேட்டிங் செய்ய தவறிவிட்டோம். ஆரம்பத்தில் வரிசையாக விக்கெட்டுகளை இழந்தாலும், கணிசமான ரன்களை எங்கள் வீரர்கள் குவித்தனர். ஆனாலும் இந்த ஸ்கோர் வெற்றிக்கு போதாது. நாங்கள் இன்னும் முயற்சி செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

வெளிப்படையாக சொன்னால், நாங்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். எந்த இடத்தில் தவறு நடந்தது என்பதை கண்டுபிடித்து, அதை சரிசெய்வோம். இனி வரும் போட்டிகளில் நிச்சயம் கம்பேக் கொடுப்போம். இந்த போட்டியில் அடைந்த தோல்வி, அடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாட உத்தவேகம் கொடுக்கும்’ என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்