'உங்க கழுத்து இப்ப எப்டி இருக்கு’... ‘ஃபீல்டிங்கில் அசத்திய வீராங்கனைக்கு’... ‘அக்கறையுடன் குவிந்த ட்வீட்டுகள்’... ‘நட்டகன் தெரிவித்த அதிரடி பதில்'..!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி என தாய்லாந்து வீராங்கனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் 3 அணிகள் பங்கு பெறும் மகளிர் டி20 சேலஞ்ச் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று ஷார்ஜா மைதானத்தில், நடைபெற்றது. இதில் ட்ரெய்ல் பிளேஸர்ஸ் அணியைச் சேர்ந்த தாய்லாந்து வீராங்கனை நட்டகன் சந்தம் பாய்ந்து தடுத்த ஒரு பீல்டிங் சமூக வலைதளங்களில் பிரபலமானது.

நோவாஸ் அணியை சேர்ந்த ரோட்ரிக்ஸ் அடித்த ஷாட், பேட்டின் முனையில் பட்டு பவுண்டரியை நோக்கிச் செல்லப்பார்த்தது. அப்போது பந்தைச் துரத்திச் சென்ற 24 வயதான நட்டகன் சந்தம், பந்தை பவுண்டரிக்கு செல்லவிடாமல் பறந்து, பாய்ந்து சென்று விழுந்து தடுத்தார். அபாயகரமான இந்த பீல்டிங் செய்யும் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியானது முதல் அவருக்கு பராட்டுக்கள் தெரிவித்து வருவதுடன், அவரது கழுத்து எப்படி உள்ளது என்று கேட்டு நலம் விசாரித்து வருகின்றனர்.

இதற்குப் பதிலளித்துள்ள நட்டகன் சந்தம் ‘என்னுடைய கழுத்து பற்றி விசாரித்த அனைவருக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன். எனக்கு எந்த கழுத்து வலியும் இல்லை’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஃபீல்டிங்குக்குப் புகழ்பெற்ற ஜான்டிரோட்ஸ் கூட இதுபோன்ற ஒரு ஃபீல்டிங் திறமையை வெளிப்படுத்தியதில்லை என்றும், இவர் ஒரு பெண் ஜான்டி ரோஸ் என்றும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள். இறுதியில் இவர் பங்குபெற்ற ட்ரெய்ல் பிளேசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாம்பியன் மகுடம் சூடியது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்