"இது மட்டும் நடந்துட்டா போதும்... உடனே எல்லாருமா 'கதற' ஆரம்பிச்சுடுவாங்க..." இந்திய பிட்ச் 'விவகாரம்'.. நாதன் லயன் பரபரப்பு 'கருத்து'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டிகளில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்தது.

இந்த இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து அணி தோல்வியைத் தழுவியிருந்த நிலையில், சென்னை மற்றும் அகமதாபாத் பிட்ச்கள் மோசமாக இருந்ததாகவும், இந்திய அணிக்கு சாதகமாகவும் அமைந்ததால் தான் இந்திய அணி வெற்றி பெற்றது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்களான மைக்கேல் வாகன், டேவிட் லாயிட் உள்ளிட்ட பலர் விமர்சனம் செய்திருந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியும் அகமதாபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளதால், அந்த போட்டியிலும் பிட்ச் மோசமாக தான் இருக்கும் என இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் தொடர்ந்து குறை கூறி வருகின்றனர்.

நாளுக்குள் நாள், இந்திய மைதானங்கள் குறித்த விமர்சனங்கள் அதிகமாகி வரும் நிலையில், இந்திய பிட்ச்சிற்கு ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், 'இந்த போட்டி முழுவதையும் நான் கண்டு களித்தேன். மிக சிறப்பான டெஸ்ட் போட்டியாக அமைந்தது. எனக்கு அப்படி எதுவும் தவறாக தெரியவில்லை. ஆனால், ஒரு பிட்ச்சில் பந்து நன்கு சுழல்வதைக் கண்டதும், உலகிலுள்ள அனைவரும் அழத் தொடங்கி விடுகிறார்கள்.

ஆஸ்திரேலிய அணியும் இது போன்ற சூழல்களை எதிர்கொண்டு, 47 மற்றும் 60 ரன்களில் ஆல் அவுட்டாகியுள்ளது. ஆனால், அப்போதெல்லாம் யாரும் எதிர் கருத்தை தெரிவிக்காமல், தற்போது மட்டும் பிட்ச் குறித்து அதிக விமர்சனங்களை ஏன் முன் வைக்கிறார்கள் என்பதே புரியவில்லை' என இந்திய பிட்ச்சிற்கு ஆதரவான கருத்துக்களை நாதன் லாயன் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்