'ஐபிஎல்' தொடரில் இருந்து விலகும் 'நடராஜன்'??.. "என்னங்க சொல்றீங்க??.." வெளியான 'தகவலால்' சோகத்தில் 'ரசிகர்கள்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

14 ஆவது ஐபிஎல் சீசன் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், இன்றைய போட்டியில், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் தற்போது மோதி வருகின்றன.

இந்த சீசனில் இதுவரை 4 போட்டிகள் ஆடியுள்ள ஹைதராபாத் அணி, நேற்றைய போட்டியில் தான் தங்களது வெற்றிக் கணக்கையே தொடங்கியுள்ளது. இந்த 4 போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் மட்டும் ஹைதராபாத் அணிக்காக களமிறங்கிய தமிழக வீரர் நடராஜன் (Natarajan), அடுத்த இரண்டு போட்டிகளில் களமிறங்கவில்லை.

இதுகுறித்து, நேற்றைய போட்டிக்குப் பின் பேசிய ஹைதராபாத் கேப்டன் வார்னர் (Warner), நடராஜனுக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டிருந்ததாகவும், அதனால் அவர் ஓய்வில் இருப்பதாகவும் கூறியிருந்தார். மேலும், அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டால், அடுத்த 7 நாட்கள் அவரால் கிரிக்கெட் போட்டிகள் ஆட முடியாமல், தனிமைப்படுத்தப்பட்ட வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், முழங்கால் காயம் காரணமாக, மீதமுள்ள போட்டிகளில் பங்கேற்காமல், நடராஜன் விலகவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், காயத்தில் இருந்து குணமடைய வேண்டி, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று, காயத்தில் இருந்து குணமடைந்து, தனது உடற்தகுதியை நிரூபிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடராஜன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவது உறுதி தான் என தகவல் பரவி வரும் நிலையில், இந்த முடிவால் ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.












கடந்த ஐபிஎல் சீசனில், ஹைதராபாத் அணிக்காக ஆடி அசத்திய நடராஜன், அதன் பிறகு சர்வதேச அணியிலும் அறிமுகமாகி, தனது முத்திரையை பதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்