'நடராஜனின் கிரிக்கெட் பின்னணி’... ‘போட்டி முடிந்த உடன் புகழ்ந்து தள்ளிய’... ‘இந்திய அணியின் ஆல் ரவுண்டர்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச அறிமுகப் போட்டியிலேயே, அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சாதனை செய்த தமிழக வீரர் நடராஜனை ஹர்திக் பாண்டியா பாராட்டியுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பரா மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. அதற்கு முக்கியமாக பெரிய பங்களிப்பை கொடுத்தார் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. அவர், இந்தப் போட்டியில், 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்து, இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

இந்தப் போட்டியில் இந்தியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்ற ஹர்திக் பாண்ட்யாவிடம், முன்னாள் ஆஸ்திரைலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே பேட்டி எடுத்தார். அப்போது பேசிய பாண்ட்யா ‘டி20 போட்டியில் விளையாடுவதற்கு நல்ல உடற்தகுதியுடன் உள்ளேன். இந்தியாவுக்காக விளையாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்கள் அணியின் பந்து வீச்சாளர் நடராஜன், எளிமையான பின்புலத்தில் இருந்து வந்தவர். அவரது கிரிக்கெட் பயணத்தின் பின்னணி கதை அனைவருக்குமே ஒரு உத்வேகத்தை அளிக்கும். ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது ஆட்டத்தில் வெற்றி பெற அதிக மெனக்கெட வேண்டியிருக்கும்.  அதனால் அந்த சவாலை எதிர்கொள்ள துணிவிருக்க வேண்டும். மிடில் ஆர்டரில் இறங்கி ஆரம்பிப்பது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் அதனையும் மீறி நல்ல பார்ட்னர்ஷிப்பால் இதனை சாதிக்க முடிந்தது’ என்று கூறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்