"என்னய்யா இங்க இருந்த 'Stump'அ காணோம்.." மீண்டும் மிரட்டிய நடராஜன்.. "Team India'ல ஒரு இடம் பார்சல்.."
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில், இன்று இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதன் முதல் போட்டியில், கொல்கத்தா அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ், புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதி இருந்தது.
டாஸ் வென்ற ஹைதராபாத், பீல்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடிய பெங்களூர் அணிக்கு இரண்டாவது ஓவரில் தலைவலி ஆரம்பித்தது.
பரிதாபமாக ஆட்டமிழந்த 'ஆர்சிபி'
மார்கோ ஜென்சன் வீசிய ஒரே ஓவரில், டு பிளெஸ்ஸிஸ், கோலி மற்றும் அனுஜ் ராவத் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 8 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்த பெங்களூர் அணி, பின்னர் அதிலிருந்து மீளவே இல்லை. மேக்ஸ்வெல் மற்றும் பிரபுதேசாய் ஆகியோர் முறையே 12 மற்றும் 15 ரன்கள் அடிக்க, மற்ற எந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை.
16.1 ஓவர்களில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூர் அணி, 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஐபிஎல் தொடரில் அந்த அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, ஒரு விக்கெட் மட்டுமே இழந்து, 8 ஓவரில் இலக்கை எட்டிப்பிடித்தது.
நடராஜன் பந்தில் பறந்த ஸ்டம்ப்கள்
முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த ஹைதராபாத் அணி, அதன் பின்னர் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முழுக்க முழுக்க ஹைதராபாத் பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்த போட்டியில், தமிழக வீரர் நடராஜனும் மேக்ஸ்வெல், ஹசரங்கா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
செம ஃபார்மில் நட்டு..
அதிலும் குறிப்பாக, ஹர்ஷல் படேல் மற்றும் ஹசரங்கா ஆகியோரை நடராஜன் போல்டு ஆக்கி இருந்தது, ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விக்கெட்டுகளின் போது, ஸ்டம்ப்கள் பறந்து சிதறி சென்றது. மேலும், நடப்பு ஐபிஎல் சீசனில் மொத்தம் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ள நடராஜன், அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில், இரண்டாவது இடத்திற்கும் முன்னேறி உள்ளார்.
அனைத்து போட்டிகளிலும் மிகச் சிறப்பாக பந்து வீசி வரும் நடராஜன், நிச்சயம் டி 20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக களமிறங்குவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ஒரு ஆண்டுக்கும் மேலாக, காயம் காரணமாக கிரிக்கெட் ஆடாமல் இருந்து வந்த நடராஜன், தற்போது ஐபிஎல் தொடரில் களமிறங்கி கலக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் இணைப்பு….
https://www.behindwoods.com/bgm8/
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இவரை ஏன் இந்திய அணி கண்டுக்கவே இல்ல.. அவர் மாதிரி ஆளுங்க டீமுக்கு வேணும்"..நடராஜனை புகழ்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்..!
- ‘வீசுன முதல் பாலே க்ளீன் போல்ட்’.. KKR-ன் முக்கிய விக்கெட்டை தட்டித்தூக்கிய ‘நட்டு’.. வேறலெவல் சம்பவம்..!
- "நடராஜன் மாதிரி ஒருத்தரால தான் அப்படி பண்ண முடியும்.." வேற லெவலில் பாராட்டிய முன்னாள் சிஎஸ்கே வீரர்
- அந்த தமிழ்நாடு பிளேயர World cup மேட்ச்'ல ரொம்ப மிஸ் பண்ணோம்.. அவர் இருந்திருந்தா கதையே வேற.. இப்போ ஃபீல் பண்ணும் ரவி சாஸ்திரி
- IPL 2022 : தொடர்ந்து மாஸ் காட்டும் தமிழக வீரர்கள்.. அதுவும் பிறந்தநாள் ஸ்பெஷலா நடராஜன் போட்ட யார்க்கர் இருக்கே.. 'வைரல்' வீடியோ
- "அத மிஸ் பண்றியா டா??.." தமிழிலேயே நடராஜன் கேட்ட கேள்வி.. சிரித்துக் கொண்டே பதில் சொன்ன வாஷிங்டன் சுந்தர்
- "திரும்ப வந்த நடராஜன்.." பந்தில் படு 'ஸ்பீடு'.. அடுத்து நடந்த தரமான சம்பவம்.. வைரலாகும் வீடியோ
- அட.. கோலியை அழகா வெட்கப்பட வெச்சுட்டாருப்பா ரோஹித்.. அதுக்கு அப்றம் நடந்ததுதான் செம்ம!
- "இப்டி இருந்தா 'வேர்ல்டு கப்' கிடைக்குறது கஷ்டம் பாஸ்.." இந்திய அணியில் உள்ள பெரிய குறை.. முன்னாள் வீரர் கொடுக்கும் வார்னிங்
- "ஹர்திக் பாண்டியா வாய்ப்பு அவ்ளோ தான் போல.." முன்னாள் வீரர் கருத்தால் எழுந்த பரபரப்பு