IPL 2022 : தொடர்ந்து மாஸ் காட்டும் தமிழக வீரர்கள்.. அதுவும் பிறந்தநாள் ஸ்பெஷலா நடராஜன் போட்ட யார்க்கர் இருக்கே.. 'வைரல்' வீடியோ

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரில் புதிய அணிகளில் ஒன்றான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை, கே எல் ராகுல் தலைமை தாங்கி வருகிறார்.

Advertising
>
Advertising

இதுவரை லக்னோ அணி, மொத்தம் மூன்று போட்டிகள் ஆடி, இரண்டில் வெற்றி கண்டுள்ளது.

இதில், நேற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக மோதிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், முதலில் பேட்டிங் செய்து, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்திருந்தது.

ஆவேஷ் கானின் அசத்தல்

அதிகபட்சமாக ராகுல் 68 ரன்களும், தீபக் ஹூடா 51 ரன்களும் எடுத்திருந்தனர். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி, சிறப்பாக ஆடினாலும், கடைசி கட்டத்தில் அந்த அணியின் முக்கிய விக்கெட்டுகளை அடுத்தடுத்து ஆவேஷ் கான் எடுக்க, 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்று அசத்தி இருந்தது.

மீண்டும் தோல்வி பாதை

கடந்த ஐபிஎல் தொடரில், மூன்று வெற்றிகள் மட்டுமே பெற்று, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்திருந்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. தொடர்ந்து, இந்த தடவையும் இதுவரை ஆடியுள்ள இரண்டு போட்டிகளிலும், தோல்வியையே அந்த அணி பெற்றுள்ளது, அதிக விமர்சனத்தை உண்டு பண்ணியுள்ளது.

தமிழக வீரர்களின் 'Performance'

ஒரு பக்கம் ஹைதராபாத் அணியின் ஆட்டம், பெரிய அளவில் விமர்சனத்தை சந்தித்திருந்தாலும், அந்த அணியிலுள்ள தமிழக வீரர்களின் செயல்பாடு, ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில், நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இதே போட்டியில், பேட்டிங் செய்திருந்த வாஷிங்டன் சுந்தர், 14 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து அதிரடி காட்டி இருந்தார்.

நடராஜனின் யார்க்கர்

இதே போல, லக்னோ அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில், டி காக் மற்றும் லீவிஸ் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை சுந்தர் எடுத்திருந்தார். அதிக ரன் அடித்த ராகுல் விக்கெட் மற்றும் க்ருனால் பாண்டியா ஆகியோரின் விக்கெட்டை நடராஜன் எடுத்திருந்தார். அதிலும், க்ருனால்  பாண்டியாவை துல்லியமான யார்க்கர் பந்து வீசி, நடராஜன் செய்த அவுட், பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

அதிலும், தன்னுடைய  பிறந்தநாளான நேற்று, நடராஜனின் சிறப்பான பந்து வீச்சு, பாராட்டுக்களை பெற்று வருகிறது. தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜன் ஆகியோர், தொடர்ந்து ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வருவது குறிப்பிபடத்தக்கது.

NATARAJAN, WASHINGTON SUNDAR, SRH, IPL 2022, LSG, வாஷிங்டன் சுந்தர், நடராஜன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்