"ஒரு பக்கம் 'ரிஷப் பண்ட்' அடிச்சு 'பட்டை'ய கெளப்பிட்டு இருக்காரு... ஆனா இன்னொரு 'பக்கம்' என்னடான்னா இப்டி பண்ணி வெச்சுருக்காங்க..." கடுப்பான 'நாசர் ஹுசைன்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக இரு அணிகளுக்கும் இடையே, ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடர் நடைபெறவுள்ளது.
முன்னதாக, டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இங்கிலாந்து அணி வென்றிருந்தாலும், அதன் பிறகு நடந்த மூன்று போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியிருந்தது. இங்கிலாந்து அணி தோல்வியடைந்த இரண்டு மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில், பிட்ச் தரமானதாக இல்லை என்றும், இந்திய அணியின் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது என்றும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் பலர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
ஆனால், இறுதி போட்டியில், இந்திய அணி சிறப்பாக பேட்டிங் செய்த அதே பிட்ச்சில் கூட, இங்கிலாந்து வீரர்கள் ரன் குவிக்கத் தவறினர். இதனால், பிட்ச் குறித்து முன்னாள் வீரர்கள் சொன்னது எல்லாம் பொய்த்து போனது போல் ஆகி விட்டது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் (Nasser Hussain), இங்கிலாந்து அணியின் மோசமான இந்த தோல்விக்கு அவர்களின் ரொட்டேஷன் பாலிசி தான் காரணம் என விமர்சனம் செய்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில், ஐந்து விக்கெட்டுகளை எடுத்த ஆண்டர்சனை இரண்டாவது போட்டிக்கு ஓய்வளித்திருந்த நிலையில், விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரையும் முதல் போட்டிக்கு பிறகு களமிறக்கவில்லை. இது பற்றி பேசிய நாசர் ஹுசைன், 'இந்திய அணியில் டெஸ்ட் தொடர் என்பது மிகவும் முக்கியமான ஒரு தொடராகும். ஆனால், அதில் வீரர்களை களமிறக்குவதில், இங்கிலாந்து அணி தவறு செய்தது.
வீரர்களை மாற்றி மாற்றி இறக்கி, அவர்களது திறமையை வெளிப்படுத்தும் சரியான வாய்ப்பையும் அந்த அணி வழங்கவில்லை. அகமதாபாத் மைதானத்தில், இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் (Rishabh Pant) பந்துகளை சிதறடித்துக் கொண்டிருந்த போது, அதே போல அதிரடியாக ஆடக் கூடிய இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் (Jos Butler), அடுத்து வரும் டி 20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆடுவதற்காக, அதே ஊரிலுள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இது தான் எனக்கு சரியாக படவில்லை.
இத்தகைய சமயங்களில், ஒரு கிரிக்கெட் வீரர் தவறவிடும் போட்டிகளின் விளைவு அதிகமாக இருக்கும். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்' என இங்கிலாந்து அணி, தங்களது வீரர்களை சரியாக களமிறக்காததை, நாசர் ஹுசைன் விமர்சனம் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
'நேற்று கொஞ்சம் பயத்தைக் காட்டிய தங்க விலை'... 'இன்றைக்குக் கொஞ்சம் நிம்மதி'... இன்றைய நிலவரம் என்ன?
தொடர்புடைய செய்திகள்
- "'ஐபிஎல்' வருது... கொஞ்சம் ஆச்சும் மீதி வைங்கப்பா..." 'இந்திய' வீரர்களை கலாய்த்து 'ரிக்கி பாண்டிங்' போட்ட 'டீவீட்'... செம 'வைரல்'!!
- 'சேவாக்' left hand'ல பேட்டிங் பண்ற மாதிரி இருக்கு... இப்படி ஒருத்தர 'கிரிக்கெட்'ல நான் பாத்ததே இல்ல... 'இந்திய' வீரரின் ஆட்டத்தால் மெய்சிலிர்த்து போன 'இன்சமாம் உல் ஹக்'!!
- ஒரே ஒரு 'ட்வீட்' தான்... இவ்ளோ நாள் 'கிண்டல்' பண்ண வாய் எல்லாம் 'Close'... 'ரெண்டே' வரியில் தரமான பதிலடி கொடுத்த 'சேவாக்'!!.. "இதுக்கு அப்புறமும் பேசுவீங்க!"
- "இந்த விஷயத்துல 'கோலி' தோத்துட்டாரு... ஸ்டோக்ஸ் தான் 'வின்னர்'..." கடுப்பேத்திய 'முன்னாள்' வீரர்!!
- "ஒரு 'சின்ன' பையன் 'நம்ம' ஓவர்ல அடிச்சுட்டானேன்னு... 'வாழ்நாள்' முழுக்க 'ஆண்டர்சன்' 'ஃபீல்' பண்ணுவாரு..." 'இந்திய' வீரரை புகழ்ந்த 'ஹர்பஜன்'!!
- தனியாளாக சதமடித்து அசத்திய 'ரிஷப் பண்ட்'... மறுகணமே 'கோலி' கொடுத்த அசத்தல் 'ரியாக்ஷன்'... 'வைரல்' வீடியோ!!
- களத்தில் மோதிக் கொண்ட 'கோலி' - 'ஸ்டோக்ஸ்'.. "அதுக்கு முன்னாடி இதான் நடந்துச்சு..." விளக்கமளித்த 'சிராஜ்'!!
- "என்னங்க இவரு சின்னப்புள்ள தனமா பண்ணிட்டு இருக்காரு..." 'கோலி'யை 'விமர்சனம்' செய்த முன்னாள் 'வீரர்'!!
- Video : '9' ரன்களில் நடையைக் கட்டிய இங்கிலாந்து 'வீரர்'... அவரு அவுட் ஆகுறதுக்கு முன்னாடி... ரிஷப் பண்ட் சொன்ன 'விஷயம்'... மைக்கில் பதிவான 'ஆடியோ'!!
- "அப்ப எல்லாம் யாரும் வாய் தொறக்கல... இப்போ மட்டும் அவங்களுக்கு என்ன 'பிரச்சனை'??.." கடுப்பாகி கேள்வி கேட்ட 'கோலி'!!