ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க முயன்ற CSK.. கடைசி நேரத்தில் தட்டி தூக்கிய பிரபல IPL அணி!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம், இன்று (22.12.2022) கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்று வருகிறது.
முன்னதாக, ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலையும், விடுவித்த வீரர்கள் பட்டியலையும் முன்னரே வெளியிட்டிருந்தது.
ஐபிஎல் மினி ஏலத்திற்கு சுமார் 20.45 கோடி ரூபாயுடன் சென்னை அணி இறங்கி உள்ளது.
இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடருக்கு முன்பாக ராபின் உத்தப்பா, பிராவோ, கிறிஸ் ஜோர்டன் உள்ளிட்ட எட்டு வீரர்களை அணியில் இருந்து விடுவித்திருந்தது.
மறுபக்கம் ருத்துராஜ், ஜடேஜா, மொயீன் அலி உள்ளிட்ட ஏராளமான வீரர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் ஏலத்தில் எந்த மாதிரியான வீரர்களை தேர்வு செய்யும் என்பதை அறியவும் அந்த அணியின் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். அதே போல, சிஎஸ்கே எந்தெந்த வீரர்கள் எடுக்க வேண்டும் என்பது குறித்து தங்களின் விருப்பமான வீரர்களின் பெயர்களையும் அவர்கள் பட்டியலிட்டனர்.
இந்த ஏலத்தில் அஜிங்க்யா ரஹானே (INR 50 லட்சம்), பென் ஸ்டோக்ஸ் (INR 16.25 கோடி), ஷேக் ரஷீத் (INR 20 லட்சம்), நிஷாந்த் சிந்து (INR 60 லட்சம்), கைல் ஜேமிசன் (INR 1 கோடி) ஆகியோரை எடுத்துள்ளது. இச்சூழலில் ஜெகதீசனை ஏலத்தில் எடுக்க சென்னை அணி முயன்றது.
மேலும் கொல்கத்தா அணியும் ஜெகதீசனை எடுக்க போட்டி போட்டது. இறுதியில் 90 லட்சத்துக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஜெகதீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பென் ஸ்டோக்ஸ்-ஐ தட்டித் தூக்கிய CSK.. அணிக்குள் வந்ததும் ஆல் ரவுண்டர் போட்ட அசத்தல் ட்வீட்!! போடுறா வெடிய 🔥🔥!!
- முதல் ஆளா ஏலத்துல போன வில்லியம்சன்.. "ஆனாலும் இப்டி ஒரு விலையா.?".. மனம் குமுறும் ரசிகர்கள்!!
- CSK கூட போட்டி போட்டு மயங்க் அகர்வாலை ஏலத்தில் எடுத்த SRH.. இத்தனை கோடியா!
- ஐபிஎல் மினி ஏலம் : வரலாறு படைத்த சுட்டிக் குழந்தை சாம் குர்ரான்.. ஆத்தாடி இத்தனை கோடியா?
- வில்லியம்சனை தட்டி தூக்கிய IPL அணி.. CSK-க்கு வருவார்னு எதிர்பார்த்தால் இந்த டீம் எடுத்துட்டாங்க!
- "CSK-ல இருந்தப்போ இப்டி தான் நடத்துனாங்க".. இரண்டே வாரத்தில் கிளம்பிய அயர்லாந்து வீரர்.. அவரே சொன்ன பரபரப்பு தகவல்!!
- "டிராவிட் தான் கேப்டன், ஆனா தோனிகிட்ட தான் ஐடியா கேப்பேன்".. சச்சின் உடைத்த சீக்ரெட்.. அப்பவே அப்படியா?
- முதல் டெஸ்ட் 2010-ல, 2வது 2022-ல.. 12 வருடம் கழித்து முதல் விக்கெட் எடுத்த உனத்கட்!! குவியும் வாழ்த்துக்கள்
- தோனி கையெழுத்து மேல் ஆட்டோகிராப் கேட்ட ரசிகர்.. இஷான் கிஷன் சொன்ன வைரல் பதில்.. Trending வீடியோ!!
- ஐபிஎல் ஏலத்துக்காக CSK போட்டு வெச்ச பிளான்?.. ராபின் உத்தப்பா உடைத்த சீக்ரெட்?.. இவங்க தான் டார்கெட்டா?"