"இத மட்டும் என் 'மனைவி' பாக்கணும்.. கண்டிப்பா 'divorce' தான்.." ரிக்கி பாண்டிங் உடைத்த 'ரகசியம்'.. வைரலாகும் 'வீடியோ'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில், சென்னை மற்றும் டெல்லி ஆகிய அணிகள் மோதி வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து இலக்கை நோக்கி அதிரடியாக ஆடிய டெல்லி அணி, 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, கடின இலக்கை எட்டிப் பிடித்தது. இளம் வீரர்களை அதிகம் கொண்டுள்ள டெல்லி அணி, கடந்த சீசனில், முதல் முறையாக இறுதி போட்டி வரை முன்னேறி, இரண்டாவது இடம் பிடித்தும் அசத்தியிருந்தது.

அனுபவமுள்ள வீரர்கள் குறைவாக இருந்த போதும், டெல்லி அணி இப்படி சிறப்பாக ஆடுவதற்கு மிக முக்கிய காரணம் அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் (Ricky Ponting) தான். ஒவ்வொரு போட்டிக்கு பின்னரும், அணி வீரர்களின் தவறுகள் மற்றும் சிறந்த விஷயங்களை சுட்டிக் காட்டுதல், அதே போல, தவறுகளில் இருந்து அவர்களை மேம்படுத்தி, சிறந்த ஆட்டத்தை வெளிப்பட வைத்தல் என அனைத்து விஷயத்திலும் அணி வீரர்களுக்கு பக்கபலமாக பாண்டிங் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, ரிக்கி பாண்டிங் குறித்த வீடியோ ஒன்றை, டெல்லி அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதையடுத்து, நெட்டிசன்களிடையே இந்த வீடியோ அதிகம் வைரலாகி வருகிறது. டெல்லி அணி பயிற்சி முகாமில், குறைவான தாடியுடன் ரிக்கி பாண்டிங் காணப்பட்ட நிலையில், அவரிடம், 'நீங்கள் தாடி வைக்க ஆசைப்படுகிறீர்களா?' என்ற கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு சிரித்துக் கொண்டே பதிலளித்த பாண்டிங், 'நிச்சயமாக இல்லை. இது போன்று நான் தாடி வைத்திருப்பதை எனது மனைவி டிவி மூலம் பார்த்தால், நிச்சயம் என்னை விவாகரத்து செய்து விடுவார். இன்னும் சில தினங்களில், நான் இதனை ஷேவ் செய்து விடுவேன். பொதுவாக போட்டிக்கு முந்தைய நாட்களில், நான் க்ளீன் ஷேவ் செய்து கொண்டு தான் இருப்பேன்' என தெரிவித்துள்ளார்.

 

கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான ரிக்கி பாண்டிங், மனைவி குறித்து தெரிவித்துள்ள வீடியோ, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில், அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்