‘என்னோட சூப்பர்ஸ்டார்’ ‘உலகக்கோப்பை ஜெயிச்சு கொடுத்தீங்க’.. கங்குலியின் வைரல் ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிசிசிஐ தலைவராக பொறுப்பேற்க உள்ள கங்குலிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பிசிசிஐயின் (BCCI) தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதனால் கங்குலிக்கு கிரிக்கெட்டின் ஜாம்பவான்களான சச்சின், சேவாக் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘பெரிய மனிதருக்கு பெரிய பயணம். இந்திய கேப்டன் பொறுப்பில் இருந்து பிசிசிஐ தலைவர். ஒரு நிர்வாகியாக கிரிக்கெட் வீரர் இருப்பது சிறப்பு வாய்ந்த ஒன்று. இதன்மூலமாக நிர்வாகம் என்பது கிரிக்கெட் வீரர் பார்வையில் இருந்து எப்படி இருக்கும் என மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். யோயோ (Yo-Yo test) முறை அமலில் இருக்கும்போது நீங்கள் தலைவராக இருந்திருக்கலாம். வாழ்த்துக்கள் தாதா சவுரவ் கங்குலி’ என பதிவிட்டுள்ளார்.
அதற்கு பதிலளிக்குக்கும் விதமாக, ‘சிறந்த வீரருக்கு நன்றி. உலகக்கோப்பையை இந்தியாவுக்கு வென்று கொடுத்தவர் நீங்கள். தற்போது கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயங்களை செய்ய வேண்டிய நேரம். நீங்கள்தான் என் சூப்பர் ஸ்டார். எப்போதும் கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கட்டும்’ என கங்குலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். இந்திய அணி கடந்த 2011 -ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்றது. அதில் யுவராஜ் சிங் ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் புதிய சாதனை’.. ‘சேவாக் பாணியில் சிக்சருடன்’.. ‘தெறிக்கவிட்ட ஹிட் மேன்’..
- IPL 2020: 'கோடிக்கணக்குல' கொட்டிக் குடுத்தும்.. வேலைக்கு ஆகல.. பேசாம இந்த '5 பேரை' தூக்கிரலாமா?
- ‘அதுக்கு அப்பறம் அவர்கிட்ட பேசினீங்களா?’.. ‘ரவி சாஸ்திரி குறித்த கேள்விக்கு தாதா கங்குலியின் வைரல் பதில்’..
- அந்தரத்தில் 'பறந்து' செம கேட்ச்.. உண்மையிலேயே 'ஸ்பைடர்மேன்' தான்.. 'வைரல்' வீடியோ!
- ‘நானும் எல்லாரையும் மாதிரி மனுஷன்தான்’ ‘எனக்கும் கோபம் வரும்’.. ஆனா..! முதல் முறையாக மனம்திறந்த ‘கூல்’ தோனி..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை’.. ‘கிண்டலுக்கு தமிழில் பதிலடி கொடுத்த மிதாலி ராஜ்’..
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘தூத்துக்குடிக்கு வந்த ஷேன் வாட்சன்’.. ‘தல’ தோனிய பத்தி என்ன சொன்னார் தெரியுமா..?
- ‘ஜாம்பவான்களின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்’ ‘ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்’.. வெளியான அதிரடி அறிவிப்பு..!