“நான் விளையாட வந்தப்போ.. சீனியர்ஸ் ஒழுக்கமா இருந்தாங்க.. ஆனா இப்போதைய இளம் வீரர்கள்...”.. ரோகித்தின் கேள்விக்கு இன்ஸ்டா நேரலையில் பதில் சொன்ன வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா பாதிப்பு காரணமாக சர்வதேச மற்றும் உள்ளுர் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும் தள்ளி வைக்கப்பட்டும் இருக்கும் சூழலில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைவரும் வீட்டில் முடங்கி உள்ளனர்.
அவ்வப்போது லேசான உடற்பயிற்சியில் ஈடுபடுவதும் சக வீரர்களுடன் சமூக வலைதளம் மூலம் உரையாடுவதுமாக இந்திய வீரர்கள் இருந்து வரும் நிலையில்,
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குடன் இன்ஸ்டாகிரம் நேரலையில் உரையாடினார். அப்போது இருவரும் கிரிக்கெட் குறித்த பல்வேறு விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர். அந்த உரையாடலின்போது ,‘தற்போதைய இந்திய அணிக்கும் தாங்கள் விளையாடிய காலத்தில் இருந்த இந்திய அணிக்கும் உள்ள வித்தியாசம் பற்றி கூறுங்கள்?’ என்று ரோகித் சர்மா யுவராஜ்சிங்கிடம் கேட்க அதற்கு யுவராஜ்சிங் அளித்த பதில் வைரல் ஆகியுள்ளது.
அதில், ரோகித்தைப் பார்த்து “நான் அணிக்குள் வரும்போது சீனியர் வீரர்கள் ஒழுக்கமாக நடந்து கொண்டனர். அப்போதெல்லாம் கவனச் சிதறல்கள் உண்டு பண்ணுவதற்கான சமூக ஊடகங்கள் அவ்வளவாக இல்லை. மூத்த வீரர்களின் சில நடைமுறைகள் இளம் வீரர்கள் உறுதியாக பின்பற்றி பொதுவெளியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் பேச வேண்டும் என்றெல்லாம் இருந்தோம். மேலும் இந்திய அணிக்காக விளையாடிய பிறகும் உங்களின் செயல்பாடுகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இந்திய அணியில் நீயும் விராட் கோலியும்தான் தற்போதைய மூத்த வீரர்கள். எஞ்சிய வீரர்கள் நிலையானவர்கள் என்று சொல்ல முடியாது. எனினும் மூத்த வீரர்களுக்கு உரிய மரியாதையை அளிக்க வேண்டும் என்கிற விஷயத்தில் ஒரு சில வீரர்கள்தான் நிலையுடன் இருப்பதாக நான் உணர்கிறேன். இதனால் சீனியர் ஜூனியர் என்கிற சிறிய இடைவெளிதான் உள்ளது. யாரும் யாரிடம் வேண்டுமானாலும், எது பற்றி வேண்டுமானாலும் பேசலாம் என்கிற நிலையில் தற்போது இந்திய அணி உள்ளது. தற்போதைய இளம் வீரர்கள் கலந்துகொள்ளும் விருந்து நிகழ்ச்சிகளை சமூக ஊடங்களில் காண முடிகிறது. ஆனால் எங்கள் காலத்தில் இதுபோன்று விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதை நினைத்துகூட பார்க்க முடியாது. நாங்கள் எதையாவது செய்யப்போய் அதை மூத்த வீரர்கள் சுட்டிக்காட்டிவிட்டால் நன்றாக இருக்காது என்று நினைத்து பயந்தோம். ஹர்திக் பாண்டியா, ராகுல் உள்ளிட்டோர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெண்கள் சர்ச்சைக்குரிய கருத்தை பேசியதைபோல் எங்கள் காலத்தில் எல்லாம் சாத்தியமே இல்லை. தற்போதைய இளம் வீரர்கள் உண்மையான கிரிக்கெட்டான டெஸ்ட் போட்டியை விட ஒருநாள் போட்டியில் விளையாடுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் இந்தியாவில் உள்ள வெவ்வேறு வகையான தன்மைகொண்ட பிட்ச்களில் விளையாடும்போதுதான் நல்ல அனுபவத்தை பெற முடியும்” என்று யுவராஜ் சிங் பேசினார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘நம்பிக்கையுடன்’ சொன்ன கேப்டன்... ‘அடுத்த’ நாளே பயிற்சியைத் ‘தவறவிட்ட’ இளம்வீரர்... 2வது டெஸ்ட்டில் யாருக்கு ‘வாய்ப்பு?’...
- அவர்கிட்ட மாட்டினா ‘துவம்சம்’ தான்... அதுக்கப்பறம் ‘ஆட்டமே’ வேற... மாத்துறதா எல்லாம் ‘ஐடியா' இல்ல... கோலி ‘திட்டவட்டம்’...
- VIDEO: ‘நமக்கு மட்டும்தான் இப்டியெல்லாம் சோதனை வருமோ’.. ரன் அவுட்டில் இருந்து நூலிழையில் தப்பிய கேப்டன்..!
- மறுக்காமல் ‘ஒப்புக்கொண்ட’ கோலி... ‘இந்திய’ அணிக்கு ‘40% அபராதம்’ விதித்த ‘ஐசிசி’...
- VIDEO: ‘கடைசிபால் 4 ரன் தேவை’.. அடிச்ச அடியில தெறிச்ச பந்து.. சூப்பர் ஓவரில் ஹிட்டடுச்ச ‘ஹிட்மென்’!
- ‘கடைசி 5 ஓவர்தான் எங்க டார்கெட்’.. ‘நாங்க ப்ளான் பண்ண மாதிரியே நடந்துச்சு’.. வெற்றி சீக்ரெட் சொன்ன ராகுல்..!
- ‘ஜடேஜா பண்ண ஒரு தப்பு’.. இந்தியாவுக்கு 5 ரன்னை குறைச்ச அம்பயர்..! 48-வது ஓவரில் அப்டி என்ன நடந்தது?
- VIDEO: தோனி மாதிரி 'ULTRA FAST' ஸ்டம்பிங்..! ஆஸ்திரேலியாவை மிரள வைத்த ராகுல்..!
- VIDEO: ‘ஒத்தக் கையில் வேறலெவல் கேட்ச்’.. ஆரம்பமே பட்டைய கெளப்பிய வீரர்..!
- அடுத்த போட்டியில் அந்த பொறுப்பு யாருக்கு?’.. விலகிய முக்கிய வீரர்..!