தீராத விளையாட்டு பிரச்சனை: '4வது ஆர்டர்லாம் என் ஃபேவ்ரைட்.. எறக்கிவிட்டு பாருங்க'.. இந்திய வீரரின் கான்ஃபிடண்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

யுவராஜ் சிங்கின் ஓய்வுக்குப் பிறகு, அவர் விளையாண்டு வந்த 4-வது ஆர்டரில் இறக்கபபடுவதற்கு தகுதியான, சரியான வீரர் யார் என்கிற விவாதம் எழுந்தது.

முன்னதாக 4வது ஆர்டரில் சேர்க்கப்பட்டு, பின்னர் உலகக் கோப்பையில் விஜய் சங்கர் நீங்கினார். மீண்டும் 4வது ஆர்டர் பிரச்சனை எழுந்தது. அரையிறுதியில் இந்தியா வலுவானதொரு ஆட்டத்தை ஆட முடியாமல் போனதற்கு இதுவும் ஓர் காரணமாகவே சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து தற்போதைய வெஸ்ட் இண்டீஸ் தொடரின் ஒருநாள் போட்டிகளில் மணீஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் ஹர்திக் பாண்ட்யா சேர்க்கப்படாததால், இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் 4வது இறக்கிவிடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் வட்டாரத்தில் ஷிகர் தவாண் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர்களின் பெயர்களும் ஒலிக்கின்றன. அவ்வாறானால், ஷிகர் தவாண் தொடக்கத்தில் பார்ட்னர்ஷிப்பிலும், 4வது இடத்தில் ராகுலும் இறக்கிவிடப்படலாம். இவருக்கு அடுத்த ரிஷப் பந்த் ஆடுமாறு அமைக்கப்படலாம்.

இந்த நிலையில், 4வது ஆர்டரில் விளையாடுவதுதான் தனக்கு விருப்பமானது என்றும், தன்னால் இந்த 4வது ஆர்டர் சிக்கலை உறுதியாகத் தீர்க்க முடியும் என்று கூறியுள்ளார் ரெஹானா. டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடும் ரெஹானே உலகக் கோப்பையில் 4வது வரிசையில் அவர் இறக்கப்படாதற்கு, சீனியர் கிரிக்கெட் வீரர் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

TEAMINDIA, TEST, INDVWI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்