"தென் இந்திய வீரர்களை பாராட்டவே மாட்டாங்களே".. இணையத்தில் கொந்தளித்த முரளி விஜய்.. யாரை சொல்றாரு?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டி, இரண்டரை நாட்களில் நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

முதல் நாள் முதலே இந்திய கிரிக்கெட் அணி அதிகமாக ஆதிக்கம் செலுத்தி இருந்தது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா அணி, 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

தொடர்ந்து முதல் இன்னிங்சில் ஆடி இருந்த இந்திய கிரிக்கெட் அணி, 400 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருந்தது. இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா 120 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இதன் பின்னர் 223 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக தடுமாற்றம் கண்டது.

இதனால் 91 ரன்களில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழக்க, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அதிக எதிர்பார்ப்புடன் ஆரம்பமான டெஸ்ட் தொடரை தற்போது வெற்றியுடன் இந்திய அணி தொடங்கியுள்ள சூழலில் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான டெஸ்ட் போட்டி குறித்து பல்வேறு கருத்துக்கள் தொடர்ந்து நிலவி வந்த வண்ணம் உள்ளது. அப்படி இருக்கையில் முரளி விஜய் போட்ட ட்வீட் ஒன்றும் பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்திருந்த சூழலில் அரை சதங்களை சதமாக மாற்றுவது குறித்த கன்வெர்ஷன் ரேட் புள்ளிவிவரம் தொடர்பான பட்டியல் ஒன்று திரையில் காண்பிக்கப்பட்டது. இதில் ரோஹித் சர்மா 50 %, விராட் கோலி 52% ஆக மாற்றியுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் கூறியிருந்தன.


Images are subject to © copyright to their respective owners

இந்த பட்டியலில் தமிழ்நாட்டு வீரர் முரளி விஜய் 60 சதவீதத்துடன் முதல் இடத்தில் இருந்தார். இதற்கடுத்து முகமது அசாருதீன், பாலி உம்ரீகர், கோலி, ரோஹித் உள்ளிட்டோரும் இருந்தனர். அந்த சமயத்தில் வர்ணனையில் இருந்த முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், "முதலிடத்தில் முரளி விஜய், ஆச்சரியமாக இருக்கிறது" என குறிப்பிட்டு இருந்தார்.

Image Credit : Murali Vijay Twitter

தான் பெயர் முதலிடத்தில் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக சஞ்சய் மஞ்ச்ரேக்கர் குறிப்பிட்டு சொன்னதை கவனித்த முரளி விஜய், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "சில முன்னாள் மும்பை வீரர்கள் தென் இந்தியர்களை பற்றி ஒருபோதும் பாராட்டி பேசியது இல்லை" என ஆதங்கத்துடன் சஞ்சய் மஞ்ச்ரேக்கரையும் டேக்  செய்து குறிப்பிட்டுள்ளார்.

MURALI VIJAY, SANJAY MANJREKAR, IND VS AUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்