இத்தனை வருஷத்துக்கு அப்றம் 'இந்த' கிரவுண்டுல மும்பை..CSK கிட்ட விட்டதை டெல்லியிடம் பிடிக்குமா மும்பை இந்தியன்ஸ்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநீண்ட நாட்களுக்கு பிறகு ப்ராபோர்னே மைதானத்தில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ். இன்று மாலை டெல்லியுடன் மோதுகிறது.
IPL 2022
2022 ஆம் ஆண்டிற்கான IPL போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதியான நேற்று தொடங்கியுள்ளது.நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது. இதில் ஆரம்பத்தில் திணறிய சென்னை அணி தோனியின் அதிரடி அரை சதத்தால் 131 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்கு 132 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 132ரன்களை குவித்து போட்டியை வென்றது.நேற்றைய போட்டி கேப்டனாக ஜடேஜாவின் முதல் போட்டியாகும்.
இன்றைய ஆட்டம்.
இன்று மாலை 3.30 மணியளவில் மும்பை இந்தியன்ஸ்க்கும், டெல்லி கேப்பிடல்ஸ்கும் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் நடைபெற உள்ளது. 5 முறை சாம்பியன்ஸ் பட்டம் வென்ற மும்பை அணியின் இந்த ஆண்டு தொடரில் முதல் போட்டியாகும். எப்போதும் முதல் சில போட்டிகளில் தடுமாறும் மும்பை அணி தொடரின் இரண்டாம் பாகத்தில் அதிரடியாக ஆடி தகுதி சுற்றிற்கு முன்னேறுவதை வழக்கமாக கொண்டது.
ப்ராபோர்னே மைதானம்
மும்பையில் உள்ள ப்ராபோர்னே மைதானத்தில் இதுவரை அனைத்து ஃபார்மேட்டுகளிலும் 28 சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று உள்ளன. அதில் இதுவரை 2010, 2014, மற்றும் 2015 ஆகிய மூன்று IPL சீன்களில் 11 போட்டிகள் மட்டுமே இந்த மைதானத்தில் நடைபெற்று உள்ளன. 7 வருடங்களுக்கு பிறகு அங்கு நடக்கும் IPL போட்டி இதுவேயாகும். மும்பை இண்டியன்ஸ் அணி 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த மைதானத்தில் விளையாடுகிறது.
கடந்த 2014 ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் விளையாடியது.அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களுக்கு 173 ரன்கள் குவித்து 174 என்னும் இலக்கை சென்னைக்கு வைத்தது.பின்னர் விளையாடிய சென்னை அணி 18.4 ஓவர்களுக்கு 176 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த போட்டிக்கு பின்னர் 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் டெல்லி அணிக்கு எதிராக களமிறங்குகிறது மும்பை.
ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, கிறிஸ் லின், ஆகியோர் வேறு அணிக்கு சென்றுவிட்ட நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, பொல்லார்ட், பும்ராஹ், முருகன் அஸ்வின் ஆகியோருடன் களமிறங்குகிறது மும்பை அணி.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "ஐபிஎல் கப்போட வாங்க தம்பி.." இந்திய வீரருக்கு ஸ்பெஷல் வாழ்த்து சொன்ன 'WWE' நட்சத்திரம்.. பின்னணி என்ன??
- எல்லை மீறிய பிராங்க்.. கடுப்பான சஞ்சு சாம்சன்.. அதிரடி முடிவெடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி..
- ப்ராக்டீஸ்ல தோனியை பார்த்ததும் வேகமாக வந்த கோலி.. ரசிகர்களை நெகிழவைத்த வீடியோ..!
- IPL 2022: இந்த சீசனில் ரசிகர்கள் மிஸ் செய்யப்போகும் 5 விஷயங்கள்!
- “அவர் ஒரு தடவை கூட டி20 டீமுக்கு கேப்டன்ஷி பண்ணதில்ல”.. ஜடேஜாவுக்கு இருக்கும் சிக்கல்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து..!
- இது தோனிக்கு கடைசி சீசனா? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் சொன்ன பதில்!
- ‘நம்ம டு பிளசிஸா இது’.. ப்ராக்டீஸ் மேட்சே வெறித்தனமா இருக்கே.. RCB வெளியிட்ட தெறி வீடியோ..!
- “சென்னையும்.. ‘தல’ தோனியும்..” சேவாக் போட்ட ஒரே ஒரு ட்வீட்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!
- “அந்த பையன் பிறப்பிலேயே கேப்டன்”.. இளம் வீரரை தாறுமாறாக புகழ்ந்த கொல்கத்தா அணியின் ஆலோசகர்..!
- “தோனி கேப்டன்ஷியில் விளையாடுறது எல்லா ப்ளேயர்ஸோட கனவு”.. இளம் வீரர் ஓபன் டாக்..!