ஏலத்துக்கு பிறகு.. தமிழில் ட்வீட் போட்ட மும்பை இந்தியன்ஸ் அணி.. பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் மெகா ஏலம், இரண்டு நாட்களாக பெங்களூரில் நடைபெறவுள்ள நிலையில், இதன் முதல் நாள், நேற்று முடிவடைந்தது.

Advertising
>
Advertising

10 அணிகள் பங்கேற்ற இந்த ஏலம், மிகவும் விறுவிறுப்பாக ஆரம்பம் முதல் கடைசி வரை நடைபெற்றிருந்தது.

ஒவ்வொரு அணிகளின் ரசிகர்களும், ஏலத்திற்கு முன்பாக தாங்கள் கணித்த வீரர்களை, தங்களது ஃபேவரைட் அணிகள் எடுக்கிறார்களா என்பதையும் ஆவலுடன் பார்த்து தெரிந்து கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ்

ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நேற்றைய ஏலத்தின் ஆரம்பத்தில், எந்த வீரர்களையும் அணியில் இணைக்க முனைப்பு காட்டவில்லை. பல சிறந்த வீரர்கள் பெயர், ஏலத்தில் அறிவிக்கப்பட்ட போதும், அதிகம் அமைதியாகவே இருந்தது.

இஷான் கிஷான்

தொடர்ந்து, இஷான் கிஷான் பெயர் அறிவிக்கப்பட்டதும் கோதாவில் இறங்கிய மும்பை அணி, அவரை 15.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. கடந்த சீசனில், மும்பை அணிக்காக ஆடிய இஷான் கிஷான், அதிரடி ஆட்டம் மூலம் வெடிக்கக் கூடியவர். அவரை மீண்டும் அணியில் சேர்க்க வேண்டி, பெரும் தொகையை மும்பை அணி கொடுத்துள்ளது.

4 வீரர்கள்

இஷான் கிஷானைத் தவிர, நேற்றைய ஏலத்தில், பிரேவிஸ், முருகன் அஸ்வின் மற்றும் பாசில் தம்பி உள்ளிட்ட வீரர்களை ஏலத்தில் எடுத்திருந்தது. இதில், தமிழக வீரரான முருகன் அஸ்வின், கடந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். அவரை சிஎஸ்கே அணி எடுக்க முயற்சிக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அதற்கான முயற்சிகளில் சிஎஸ்கே அணி இறங்கவில்லை.

வணக்கம் முருகன் அஸ்வின்

இறுதியில், மும்பை அணி, சுழற்பந்து வீச்சாளர் முருகன் அஸ்வினை, 1.6 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருந்தது. அவரை அணியில் வரவேற்கும் விதமாக ட்வீட் செய்த மும்பை அணி, 'வணக்கம் முருகன் அஸ்வின்' என தமிழில் குறிப்பிட்டிருந்தது.

தமிழக வீரரை தமிழில் வரவேற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்வீட், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது. அதே போல, ராகுல் சாஹர் இருந்த இடத்தில், தற்போது முருகன் அஸ்வினை எடுத்துள்ளது பற்றியும், ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

MUMBAI INDIANS, IPL AUCTION, MURUGAN ASHWIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்