17.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸால் வாங்கப்பட்ட கேமரூன் க்ரீன்.. டெஸ்ட் போட்டியில் காயம்.. ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழ்நிலை?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி  ஏலம், கடந்த (22.12.2022) அன்று கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற்றது.

Advertising
>
Advertising

முன்னதாக, ஐபிஎல் தொடரில் உள்ள 10 அணிகளும் தங்கள் அணியில் தக்க வைத்துக் கொண்ட வீரர்கள் பட்டியலையும், விடுவித்த வீரர்கள் பட்டியலையும் முன்னரே வெளியிட்டிருந்தது.


இந்த மினி ஏலத்தில் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் சாம் குர்ரான் 18.50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வரலாறையும் படைத்துள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக, கேமரூன் க்ரீனை மும்பை இந்தியன்ஸ் அணி, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது அதிகபட்சமாக உள்ளது. மேலும் மும்பை அணி அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்த வீரராகவும் கேமரூன் க்ரீன் மாறி உள்ளார்.

இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் மினி ஏலத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இதற்கடுத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரனை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 16 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்த கேமரூன் க்ரீன் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் காயம் அடைந்துள்ளார். தென்னாப்பிரிக்கா வீரர் நோர்கியா 145 கிமீ வேகத்தில் வீசிய  பந்து கேமரூன் க்ரீனின் வலது கை ஆள்காட்டி விரலை காயமுற செய்துள்ளது. இதனால் ரிட்டையர்டு ஹர்ட் முறையில் களத்தை விட்டு கேமரூன் க்ரீன் வெளியேறினார்.

23 வயதான கேமரூன் க்ரீன், இந்த காயத்தில் இருந்து முற்றிலும் குணமாக 5 மாதங்கள் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 
காயம் தொடர்பான அதிகாரப்பூர்வ மருத்துவர்கள் குழு அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மருத்துவர்கள் குழு அறிக்கை அடிப்படையில் கேமரூன் க்ரீன் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது குறித்து முடிவெடுக்கப்படும்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்