பந்தால் வேகமாக அடித்த 'CSK' பவுலர்.. மறுகணமே கோலி செய்த காரியம்.. "மனுஷன் முன்னாடி மாதிரி எல்லாம் இல்ல.."

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (04.05.2022) போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகிறது.

Advertising
>
Advertising

இதுவரை 9 போட்டிகள் ஆடியுள்ள சிஎஸ்கே, மூன்று ஆட்டங்களில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் 9 ஆவது இடத்தில் உள்ளது.

இனியுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் தான், அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையிலும் உள்ளது.

வெற்றி பெறப் போவது யார்?

மறுபக்கம், ஆர்சிபி அணி ஆரம்பத்தில் நன்றாக தொடங்கி இருந்தாலும், கடைசி மூன்று போட்டிகளில் தோல்விகளை சந்தித்துள்ளது. இதனால், பெங்களூர் அணியும் மீதமுள்ள போட்டிகளில் வெற்றிகளைக் குவித்தால் தான், பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற சூழ்நிலையும் உள்ளது.

இதனால், இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் என்ற நிலையில், டாஸ் வென்ற தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்திருந்தார். அதன்படி, பேட்டிங் ஆடிய பெங்களூர் அணி, பவர் பிளே ஓவர்களில் சிறப்பாக ஆடி ரன் சேர்ந்திருந்தது. ஆனால், அதன் பின்னர் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த டு பிளெஸ்ஸிஸ், 38 ரன்கள் எடுத்து அவுட்டாக, பின்னர் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தது.

இதன் பின்னர், மஹிபால் 42 ரன்கள் எடுக்க, கடைசி ஓவரில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 173 ரன்களை பெங்களூர் அணி எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கியும் சிஎஸ்கே ஆடி வருகிறது.

பந்தை வேகமாக எறிந்த முகேஷ்

இந்நிலையில், இந்த போட்டியின் போது விராட் கோலி செய்த விஷயம் ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஆர்சிபி பேட்டிங் செய்த போது, முதல் ஓவரை முகேஷ் சவுத்ரி வீசி இருந்தார். இந்த ஓவரின் கடைசி பந்தினை கோலி எதிர்கொண்டார். அவர் அடித்த பந்து, முகேஷ் கைக்கே சென்றது. அந்த சமயத்தில், கிரீஸை விட்டு கோலி வெளியே இருந்ததால், ரன் அவுட் செய்ய முகேஷ் முயற்சி செய்தார்.

கோலி செய்த விஷயம்

ஆனால், கிரீஸுக்குள் செல்ல முயன்ற கோலி மீது, முகேஷ் வீசிய பந்து வேகமாக சென்று பட்டது. இதனைக் கண்டதும் உடனடியாக கோலியிடம் மன்னிப்பு கேட்டார் முகேஷ். தன்னுடைய தவறை பவுலர் ஏற்றுக் கொண்டதும், உடனடியாக இன்முகத்துடன் Thumbs Up காட்டினார் விராட் கோலி.



அதிகமாக ஆக்ரோஷத்துடன் இருக்கும் கோலி, பவுலரின் தவறை அறிந்து சிரித்த முகத்துடன் இருந்த சம்பவம், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

 

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.. https://behindwoods.com/bgm8

VIRATKOHLI, MUKESHCHOUDHARY, RCB VS CSK, IPL 2022, விராட் கோலி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்