ஏலத்துக்கு வந்த முகமது அலியின் சாம்பியன்ஷிப் பெல்ட்.. சூடுபிடிச்ச ஏலம்.. யம்மாடி இவ்வளவு கோடியா.. அப்படி என்ன இருக்கு அதுல.?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகப் புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரரான முகமது அலியின் சாம்பியன்ஷிப் பெல்ட் ஒன்று கோடிக்கணக்கில் ஏலத்தில் விற்பனையாகி உள்ளது. இது அவரது ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.
1942ம் ஆண்டு ஜனவரி 17ம் நாள் அமெரிக்காவின் கென்டகி நகரில் பிறந்தவர் முகமது அலி. காசியஸ் மார்செலஸ் கிளே என்பதுதான் முகமது அலியின் இயற்பெயர். சிறுவயதில் முகமது அலிக்கு இருந்த ஆக்ரோஷத்தை கண்ட ஜோ மார்ட்டின் என்னும் காவல்துறை அதிகாரி அவரை குத்துச் சண்டையில் ஈடுபட காரணமாக இருந்திருக்கிறார். மேலும், முகமது அலியின் பயிற்சியாளராகவும் ஜோ செயல்பட்டார். ஆனால் முகமது அலியின் கரங்கள் இந்த உலகை வெல்ல இருக்கும் செய்தி ஜோ மார்டினுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. முகமது அலி களம் கண்ட 61 போட்டிகளில் 56 வெற்றிகளை பெற்றவர். அதில் 37 நாக்-அவுட் மூலம் கிடைத்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி
குத்துச் சண்டையில் வெற்றியை மட்டுமே அதிகம் சந்தித்தவரான அலி, கடந்த 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற ரம்பிள் இன் தி ஜங்கிள் (Rumble in the Jungle) என்ற போட்டியில் புகழ்பெற்ற ஜார்ஜ் ஃபோர்மேனை எதிர்த்து களமிறங்கினார். பரபரப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் ஜார்ஜ் ஃபோர்மேனை நாக்-அவுட் செய்து பட்டத்தை வென்றார் அலி. இது அவருடைய வெற்றி சரித்திரத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் வென்றபோது அலி பெற்ற சாம்பியன்ஷிப் பெல்ட் சமீபத்தில் ஏலத்திற்கு வந்திருக்கிறது. இதனை வாங்க பல பிரமுகர்கள் போட்டியிட்டிருக்கிறார்கள்.
ஏலம்
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஏலத்தில் இண்டியானாபோலிஸ் கோல்ட்ஸ் NFL அணியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் இர்சே இந்த பெல்ட்டை 6.18 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (இந்திய மதிப்பில் 50 கோடி ரூபாய்) வாங்கியுள்ளார். விளையாட்டு நினைவுச் சின்னங்களை சேகரிக்கும் ஆர்வம் கொண்டவரான இர்சே தனது வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு துறையில் என்றென்றும் மறக்கமுடியாத பொருட்களை பாதுகாத்து வருகிறார்.
இந்நிலையில், முகமது அலியின் சாம்பியன்ஷிப் பெல்ட் 50 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது அவரது ரசிகர்களை நெகிழ வைத்திருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "1 KG டீ தூள் விலை இவ்ளோ ரூபாவா..?" .. அப்படி என்னங்க இதுல ஸ்பெஷல்??
- உலக வரலாற்றிலேயே மிக அதிக விலைக்கு ஏலம் போன கார் இதுதான்.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா?
- ஒரு sandwich-காக பெயிண்டிங்கை கொடுத்த ஓவியர்.. ஏலத்துல நடந்த அதிசயம்.. ஹோட்டல் ஓனருக்கு அடிச்ச அதிர்ஷ்டம்..!
- நூற்றாண்டோட பெஸ்ட் கோல் அடிச்சப்போ மாரடோனா போட்ருந்த டிஷர்ட்.. ஏல வரலாற்றில் புதிய சாதனை.. ஆத்தாடி இவ்வளவு கோடியா?
- முக்கியமான மேட்ச்ல மாரடோனா போட்ருந்த டிஷர்ட் ஏலம்..ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா?
- இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கு வந்ததில்லை.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா.. விற்பனையாளர்களின் BP-யை எகிறவைக்கும் வெள்ளை நிற வைரம்..!
- 2.2 கோடிக்கு ஏலம்போன பிரபல ராப் பாடகரின் லவ் லெட்டர்.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!
- கண்ணீருடன் ஏலத்துக்கு வந்த இளம்பெண்.. காரணத்தை கேட்டு உடைந்துபோன அதிகாரிகள்..!
- இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கே வந்தது இல்லயாம்.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா..!
- 1992-ல் அனுப்பப்பட்ட 'மெசேஜ்' ஒரு கோடிக்கு ஏலம்...! அப்படி 'என்ன' ஸ்பெஷல்...? - வோடபோனுக்கு அடித்த ஜாக்பாட்...!